நான் கொறட்டை விட்டாக் கூட என் காது கேட்டுண்டு தான் இருக்கும்

Thanks to Suresh / Karthi for sharing this…..


ஒரு சங்கர ஜெயந்திக்கு நாங்க எல்லோரும் காஞ்சிபுரம் போயிருந்தோம். சரியான கூட்டம், சங்கர மடத்திலே….தாங்கலே, சரி, காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போகலாம் ன்னு அங்கே போனா அங்கே எல்லாரும் அம்பாளையே மறைச்சிண்டு நின்னா….

பெரியவா(கையை குழைத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஜெயராம சர்மா மாமா அவர்கள்) இப்படி காட்டினால் எல்லோரும் நகர்ந்துண்டே இருங்கோ ன்னு அர்த்தம்.

காமாக்ஷி அம்மன் சந்நிதியிலிருந்து நான்கைந்து வீடு தள்ளி, குருக்கள் ஆகம். (பெயர் சொல்கிறார், கேட்கவில்லை). அங்கே வந்து தன் சொந்த வீடு மாதிரி ஏறி திண்ணையிலே படுத்துண்டுட்டா பெரியவா. உடம்பு சரி இல்லாத இருந்தா..

பெரியவா பத்தி பேசுவாரே…அவர் வந்திருக்காரா? கணேச சர்மா….பெரியவாளை பத்தி நிறைய சொல்றாரே…(என்று கேட்கிறார் ஸ்ரீ ஜெயராம சர்மா மாமா)

எதுக்கு எங்க அத்திம்பேர் போயிருக்கார் தெரியுமா? அவா அப்பா சாம்பமூர்த்தி கனபாடிகளை பத்தி, ஒரு புஸ்தகம் கொண்டு வந்திருக்கார். அதை ரிலீஸ் பண்ணப் போறார், பெரியவா கிட்ட கொடுத்து.

பெரியவா படுத்துண்டே மெதுவா கேக்கறா…’ஒங்க அப்பா திருவிடைமருதூர் ல தானே இருந்தார்…’ எல்லாம், நம்ப சொல்றதுக்கு முன்னாடியே அவர் எல்லாத்தையும் சொல்லிடுவார்…பேமிலி, சரவுண்டிங் எல்லாத்தையும் சொல்லிடுவார்…

‘நீ படி, நான் படுத்துண்டே கேக்கறேன்…’ அத்திம்பேர் சொல்லறார்… திடீர் ன்னு கொறட்டை சத்தம் கேக்கறது…கொர்ர் கொர்ர்…

இவர் நிறுத்தறார்…’ஏன் நிறுத்திட்டே…நான் கொறட்டை விட்டாக் கூட என் காது கேட்டுண்டு தான் இருக்கும்…நீ படி..நீ படி…’

என்ன பண்றது….கொஞ்ச நேரம் கழிச்சு மரும்படியும் கொர்ர்ர் கொர்ர்ர்..

கொறட்டை தான் விடறார்…தூங்கச்சே கொறட்டை விடறது தானே…கொறட்டை விட்டாத் தானே நன்னா தூங்கினா ன்னு அர்த்தம்….

அப்போ ஒரு சின்ன…. அத்திம்பேர் பேமிலி…எப்படி நார்த் ல இருந்து வந்தோம்…அப்போ முஸ்லிம் ஜாஸ்தி இருந்தா இல்லியோ….ஒவ்வொரு இடமா தாண்டி…

வெள்ளைக்காரன் ரிவர்ஸ் ஓட கரைகளைத் தான் டிஸ்ட்ரிக்ட் எல்லைகளை வெச்சு இருக்கான்…அத்திம்பேர் அதை சொல்லி இருக்கார்…

அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா பெரியவா….

அங்கே இருந்து கங்கை கரை ல இருந்து எங்கேயோ வந்து… ராஜாக்கள் ரிசீவ் பண்ணுவாளாம்…எல்லாம் கொடுப்பா….எல்லாம் எழுதி இருக்கார் அதிலே…

ரொம்ப அழகா, விழுப்புரம் பக்கத்திலே … ஒரு கிராமத்திலே தங்கி இருக்கா…அதப் பத்தி எழுதி இருக்கார்…

அங்கே பெண்ணையாறு… வட பெண்ணையாறு…கரையிலே இவர்கள் தங்கினார்கள் அப்டின்னு அத்திம்பேர் எழுதி இருக்கார்…

இவர் கொறட்டை விட்டுண்டு இருக்கார்…இதைக் கேட்டுண்டே…பெரியவா…

இதைக் கேட்ட உடனே பெரியவா, ‘பாலகிருஷ்ணா,என்ன சொன்னே, என்ன சொன்னே…வட பெண்ணை ஆறா? சரியா பாரு, இல்லேப்பா, அது தென் பெண்ணை ஆறு…இது நார்த் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் அது சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட்…அவா வந்து தங்கினது அந்த சவுத் ஆர்காட் டிஸ்ட்ரிக்ட் ல’….

இவ்ளோ நன்னா கொறட்டை விட்டு தூங்கிண்டு இருந்தவர் அது என்ன டிஸ்ட்ரிக்ட் ன்னு சொல்லி, அதை சரி பண்றாளே… அத்திம்பேருக்கு அவ்ளோ ஆச்சிரியம்… ‘

அத்திம்பேர் ன்னு சொல்லிட்டா, சுவாமிகளுக்கு அவ்ளோ இது…

‘பாலகிருஷ்ணன் வந்திருக்கானா? சொல்லு….ஏதாவது சொல்லு….’அப்டிம்பார்.

‘ஏதாவது சொல்லு’ ன்னா, ஏதாவது கதை சொல்லணும்…ரெண்டு பேரும் திருப்தி ஆயிடுவா…

அப்டி….அந்த பெரியவாளோட சம்பந்தம் நமக்கு இருக்கறதுனால தான்…நம்பள அறியாம நல்லது எல்லாம் சொல்றோம் ன்னு தோணறது…

===================================

Shri Jayarama Sharma had once gone to meet Swamigal along with Shri TS Balakrishna Sastrigal. The purpose of the visit was to release the book Shri TSB had written about his illustrious father Shri Sambamurthi Ghanapadigal, in the august presence of Him.

Being Shankara Jayanthi day, the throng of devotees at the Matam was just too much; so they decided to go to Kamakshi Amman temple but the scene was the same there too! They see Him lie down on the portico ‘thinnai’ in a house near Kamakshi Amman temple and go to Him.

“Your father used to live in Thiruvadaimaruthur, no?”, says He to Shri TSB.

And goes on to tell their family’s background in minute details….!

And asks him to read from the book. As Shri TSB starts to read, he is surprised to hear the snoring sound of Swamigal, and stops reading!

The Sarveshwaran says quickly,

“I may be snoring, but don’t stop, my ears are always listening…!”

And then Shri TSB goes on to say how his father’s family migrated from the North to South India and how they were received with respect by the local Kings wherever they went for the sole reason that his father was well learned in the holy Vedas.

And his father settled down near the banks of small place called North Pennaiyar near Vizhupuram.

The Seer who was snoring until now, gently asks Shri TSB:

“Balakrishna, what did you say now? North Pennaiyar? No, it should be South Pennaiyar as it is in South Arcot district, please correct it”!

Shri TSB was floored!Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. arithuyil and arihthuyil a tamil mail sent to you will explain this in full.

  2. the English Translation is excellent.

  3. the person who has heard the snore is wrong because periava is always awake to all of us!!!! Have i told the incident of Justice Rengnath Misra and his book in oriya which periava corrected while justice was reading!!!!!!!

Leave a Reply

%d bloggers like this: