ஞான ஒளி


scan0128

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருள, 1952ஆம் ஆண்டு, நானும், எனது தம்பி, அம்மாவுடன், அண்ணாவின் அழைப்பிற்கேற்ப , சென்னை வந்தடைந்தோம். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். பெரியவா சொல்லி ஆசீர்வதித்த மாதிரியே, நான் ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்சூலிலே 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது அண்ணா என்கிறவர் தாம் எனக்கு தலைமை ஆசிரியர். கேள்விகள், பரீட்சை எதுவில்லாமல், அபிவாதயே சொல்லச்சொல்லி அட்மிஷன் கிடைத்தது. அப்போது ஒரு நாள், எனது தமையனார், திரு. நடராஜன் (இப்போது செந்தில் துறவி) நான் தினந்தோறும் படிக்கும் ராமாயணப் புத்தகத்தில் நான் அமைதியைத் தேடி போகிறேன் என்று எழுதி வைத்து விட்டு தெற்கே சில கோவில்களுக்கு சென்று இருக்கிறான். அப்போது கடலூரிலே நம் பெரியவாளை காலையில் சந்தித்திருக்கிறான்.

பெரியவா கேட்டாளாம், “ஏம்பா நீ தேடி வந்த அமைதி கிடைத்ததா?”

எங்கேயோ எழுதியதை கடலூரில் கேட்டார் என்றால் நீனலே யோசியுங்கள் அவருடைய ஞான ஒளியை!!

அது மட்டுமா, “நீ உடனடியாக அருகாமையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு போகும் படியும்” உத்தரவு போட்டிருக்கிறார். அவன் “பூஜை பார்த்து விட்டு போகிறேன்” என்று சொன்னபோது, “வேண்டாம், இப்போதே போ” என்று பிரசாதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

ஆடுதுறை வந்ததுமே, அவனுக்கு குளிர் ஜுரம், அம்மை முதலியன கண்டது. இது தெரிந்துதான் பெரியவா அப்படி சொல்லியிருக்கிறார். அப்புறம், நானும், அம்மாவும் போய் அவனை சென்னைக்கு அழைத்து வந்தோம்.

எங்களுக்காக எத்தனை பெரிய உதவி செய்திருக்கிறார்?

—இன்னும் வரும்Categories: Devotee Experiences

Tags: ,

1 reply

  1. Probably from BharaNi Maama’s experiences, from the look of it. Please correct me if wrong. Anna Subramanya Iyer is a great Samskrit scholar and has translated so many Vedic works and religious books into Tamil and they are all available at Ramakrishna Matham, Mylapore, Chennai. Senthil ThuRavi has written many travelogues on religion and temples. Very nice to read about these great people. Maha Periya ThiruvadigaLee CharaNam!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: