கண் கலங்கின மகா பெரியவா!

I have read 100s – actually 1000s of articles so far….this is the only article where tears touched Periyava’s eyes. I know the source of this article – I have the book too…it is an authentic source….Actually, I was searching for this article for quite some time…Thanks to FB friend who posted this…

0528
பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.

“இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா? எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே! எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா!…கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே!…..” கதறினாள். கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.

சன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.

“எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா…ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான் எனக்கு கதி. நா என்ன பண்ணட்டும்? எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா…..”

அமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்…..

“நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே? அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை! என்ன பண்ணறேன்னா….பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி! இது ஒண்ணுதான்…ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான வழி!..” என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லிவிட்டார்.

ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது! இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.Categories: Devotee Experiences

Tags:

13 replies

 1. Maha periyava’s knowledge on and understanding of the people toiling in the hot sun is something that amazes one.

  I am from a village near Mannargudi, The villagers working in paddy fields after finishing their morning session will sit under a big Banyan tree and have cooked boiled riced soaked in water (satham & theertham). It will be nice to see the contented man’s happiness adoring his face.

  The thrupti that aathma gets at that point can not be explained in words . one should experience it .

  Maha Periyava ThiruvadigaLe CharaNam

 2. Tears in my eyes———– Jaya Jaya shankara Hara Hara shankara – Maha periyava thrivadi saranam

 3. oru aathmaa santhiadaya mahaperiyavaa sonna ubaayam adhey nerathil paamara janangalukkum payanpadum ubaayam .. peria kasu panam selavillai .. aana vayalil vervai sin dha uzaikkum janangal manasu eppadi kulirum indha neermor viniyogathaal .. mahaperiyavarudaya seedargalaagiya naam idhal num vaazhnaalil vidaadhu kadaipidikkavendum .. Jaya Jaya Sankara Hara Hara Sankara

 4. மனம் வலிக்கிறது. 🙁

 5. Can someone translate it into English……please……….

 6. THANK YOU SO MUCH OF THE OUR DHARMA DEVATHAI, NADAMADUM DEIVAM, SRI SRI SRI SRI KANCHI PARMACHARYAAL’S GREAT BLESSINGS. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

 7. why some of the postings are opening and some of the postings are not opening. For example this posting is not opened . Hence i am unable to read the posting what it is. Kindly help me .to read this posting.

  regards

  d sambandamoorthi

 8. Very touching episode. Brings tears to our eyes also. Ramaswami Mama’s experience is very elevating. Maha Periyava ThiruvadigaLee CharaNam!

 9. பரிஹாரம் என்பது ஒருவருடைய அனாஹதம் மற்றும் சஹாஸ்ரார சக்கரங்களை ஊகுக்குவிப்பது ஆகும்.அதன் மூலம் ஒருவருடைய மனதில் மற்றும் எண்ணங்களில் மலர்ச்சியை, எதிர்பார்ப்பு இல்லாத அன்பை ஏற்படுத்தவேண்டும்.அதை மிக துல்லியமாக செயல் படுத்தியுள்ளார்” நம் செல்ல தாத்தா”.அவர் வழிகாட்டுதல் என்றும் நமக்கு உண்டு என்பது உறுதி.
  மஹா பெரியவா சரணம்.
  .

 10. Really touching episode.

 11. sir, This could not be opened with kind regards, R.Venkataramanan

 12. tears in my eyes i remember that in those days while in tiruvanaikoil in forties i used to sit till the afternoon in a place to distribute neermor. i still remember the trust is named as pachyappa mudaliyar kattalai as there used to be a joke ‘jambu was taking salt flour needle gone sitting in green father crocadile whos place!!!! further tears now because the postman knocks in our house even today and asks for water drinks a bottle full saying that when he asked for water from someone they replied that they cant afford to give him water to drink as they themselves are purchasing can water….!!! generation gap or days have changed??

 13. superb.

Leave a Reply

%d bloggers like this: