“பசு இன்னா இப்டி ஒதைக்குது? கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது! ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே! இதென்னா அக்குறும்பு?’என்று அலுத்து கொள்கிறார், ஸ்ரீ மடத்து இடையர்.
உள்ளே நம்ம பெரியவா குறும்பு குழந்தையாக சிரித்து கொள்கிறார்.
“பாதி ராத்ரில கன்னு “அம்மா”ன்னு கத்தித்து [தம் வயிற்றை தட்டி காட்டி] அதுக்கு போறலைன்னு தெரிஞ்சுது.நான்தான் யாருக்கும் தெரியாம போய் [தம் திருட்டுத்தனத்தை தாமே ரசித்து நகைத்து] கன்னை அவுத்து விட்டேன். அது வயிறு முட்ட முட்ட ஊட்டித்து, அப்புறம்……எங்கேயாவது ஓடிட போறதேன்னு பிடிச்சு கட்டிட்டும் வந்துட்டேன். அதுதான் கறக்க விடமாட்டேங்கறது!”என்றார் அருகிலிருந்தவர்களிடம்.
இம்மாதிரி நிகழ்ச்சி பலமுறை நடந்ததுண்டு!
பசுக்கள் தண்ணீர் பருகுவதை அன்பு நயனங்களால் பருகிகொண்டிருந்த பெரியவாளிடம், ஒரு கன்று துள்ளி ஓடிச்சென்றது. புனித திருவுருவின் மீதே அது உராய்ந்து நிற்க, பாரிஷதர்கள் அதை பிடித்து கட்ட விரைந்தனர்.
பெரியவா “வேண்டாம்” என்று சைகை செய்தார். யாருமே தீண்டாத தெய்வ திருமேனியை உராய்ந்து, பேறு பெற்றுக்கொண்டிருந்தது அந்த கன்று சற்று ஸ்வாதீனம் பெற்று, பெரியவாளின் உள்ளங்காலை மோந்து, நக்கவும் தொடங்க, உள்ளம் நிறைந்த அவரும் அதை முதுகை கோதி கொடுத்தார்.
சரியாக அந்த சமயம். வடமதுரையிலிருந்து வந்த ஒரு சாது, பெரியவாளின் திருக்கோலத்தை கண்டதும் ஆனந்த பாஷ்பம் அடைந்தார்.
“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமே கண்டேனே!” என்று நா தழுவி தழுக்க கூறினார்.
விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை சாதுவிற்கு அருளினார்.
Categories: Devotee Experiences
Very divine experience. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
yenna bhagyam petrom…periyava nanda gopal mattumalla… AAA…nanda gopalan than….
periyava perumaigalai VAAYINAAL PAADI MANATHINAAL SINTHIKKA
POYAPILAYUM PUGUTHARUVAAN…. THEEINIL THOOSAKUM SEPPELO REMPAAVAI enra Andal Thiruppavai varigal thaan ninaivirkku varukinrana.
அருமையான பகிர்வுக்கு நன்றி.