“அந்த மகான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்…”

Vidya Home

[மார்ச் 17,2013,தினமலரில் வந்த செய்தி]

காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்திலுள்ள தெரு வழியாக நடந்து வந்தார். ஒரு வீட்டு வாசலில் பந்தல், தோரணம் என அமர்க்களப்பட்டது. அவ்வீட்டு சிறுவனுக்கு உபநபயனம் (பூணூல் சடங்கு). அந்த வீட்டின் முன் பெரியவர் நின்றார். வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, பாதத்தில் விழுந்து ஆசி பெற்றனர்.

பெரியவர், உபநயனம் செய்த பையனையும், அவனது பெற்றோரையும் முன்னால் வரும்படி அழைத்தார். உபநயனம் நடப்பதற்கு முந்தியநாள் தான், அந்தப் பையன் தன் அப்பாவிடம், “”அப்பா! மகா பெரியவா நம்ம ஊருக்கு வந்திருக்கிறாரே! எனக்கு பூணூல் சடங்கு நடக்கிற விபரத்தை அவரிடம் சொன்னால், நம் வீட்டுக்கு வருவார் இல்லையா!” என்று கேட்டான்.

அதற்கு அப்பா,””அந்த மகான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்,” என்று சொல்லியிருந்தார்.
ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், பெரியவரே யாரும் அழைக்காமல் அங்கு வந்து நின்று, தங்களை முன்னால் வரச்சொல்கிறார் என்றால், அவர்களுக்கு எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்!
பெரியவர் அந்த சிறுவனை ஆசிர்வதித்தார்.

பின், அடுத்த தெருவுக்கு சென்றார். அவ்வீட்டில், ஒரு சிறுவனும், அவனது பாட்டியும் இருந்தனர். பெரியவரைக் கண்டதும் நமஸ்கரித்தனர்.

பெரியவர் மூதாட்டியிடம், “”நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவரர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்?” என்றார்.

“”பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் செய்தல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன்,” என்றார் மூதாட்டி.
பெரியவர் சிரித்தார்.

“”பார்த்தாயா! இப்போது நான் வந்து விட்டேன், என்ன செய்யப் போறே!” என்றவர், பையனை அருகில் அழைத்து, “”என்னைத் தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப்பட்டாய் அல்லவா! இப்போ, நான்உன் வீட்டுக்குள்ளேயே வரப்போறேன். நீஅனுமதிப்பாயா?” என்றவர், வீட்டுக்குள் வந்து சிறுவனையும், மூதாட்டியையும் ஆசிர்வதித்தார்.

எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மகிமைமிக்கவராக இருந்தார் பெரியவர்.
சி.வெங்கடேஸ்வரன்

*****

Thanks a ton to Shri Varagooran Narayanan who had posted this in Sage of Kanchi group in Facebook http://www.facebook.com/groups/Periyavaa/. Special thanks to Smt Vidya Raju for that exquisite picture and the lovely garlands for Him.



Categories: Devotee Experiences

19 replies

  1. நாம் எல்லோரும் அவர் (மஹா பெரியவா)போல மாற வேண்டும் என்றும் அவரையும் தாண்டி போக வேண்டும் என்றும் தான் மஹா பெரியவா அவர்களின் விருப்பமாக இருந்தது.மஹா பெரியவா காட்டிய பாதை மிக சுலபமாக எல்லோராலும் கடைபிடிக்க கூடியதாக உள்ளது.நாம் எல்லோரும் அவர் விருப்பத்தை(நம் கடமையும்,நமது மோட்சமும் கூடஅது தான்)நிறைவேற்றுவோம்.
    மஹா பெரியவ சரணம்.
    வெங்கட் அனந்தராம்.
    நங்கநல்லூர்.
    சென்னை-600061

  2. He still lives in HIS devotees heart and giving HIS blessings.

  3. Guruvadi thiruvadi malaradi saranam. Hara Hara Sankara Jaya Jaya sankara.

  4. H H Maha Periyava is Divine Incarnation and “Thrikala Gnani”. Maha Periya is really a “Nadamad(iya)um Dheivam.

  5. anantharaman viswanathan,adambakkam

    Our Maha Periyava is living in all our house and watching everything through celestial body.He never let us down.Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  6. It is instance to prove that Bhakthi never loses its significance. Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Balasubramanian NR

  7. நினைத்தவர்களை அந்த மகான் என்றுமே கை விட்டது இல்லை என்று இந்த நிகழ்ச்சி நிருபிக்கறது. அவர்தான் த்ரீகால ஞானி ஆயிற்றே ! ஜெய ஜெய சங்கரா !!

  8. ippo engathukku varuvala enrru thinamum kettunde irukkom. varuva. nambikkai veen pokathu. n.ramaswami

  9. “அந்த மகான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்…” …HE is always with us. Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  10. தெய்வம் ‘மகா பெரியவா‘ ரூபேண. ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

  11. The same question always arise in my mind too,Kanavilana namakku periva vara mattala enakku inda questionkku answer panna mattala, i always think,so this message gives me the confidence,periva namma veettukkum varuva. Hara hara Shankara Jaya jaya Shankara.

  12. Periyaval proves the greatness all the time

  13. DEAR ALL DIVINE LOVERS,FOLLOWERS, THESE INCIDENTS MAKE OUR SELVES JOYFUL..ONE HAS HAD TO DO SEVERE PENANCE TO
    HAVE DHARSHAN OF DIVINE.THE CHILDREN OF DIVINE ARE BLESSED. PLEASE MAKE A VOW NOT TO HARASS,KILL BEINGS FOR THE SAKE
    OF BENEFITS. THIS WILL MAKE DIVINE ENTER IN TO YOUR SOUL. OM JAYA JAYA JAYA SANKARA OM HARA HARA HRA SANKARA OM JAI SRI SAI RAM OM SRI SARVA MANGALA DIVINE GRACE SUBHAM. WE ALL BOW TO THEM AND PROSTRATE BEFORE THEM.

  14. Sir Guru Pathuka saranam—— Great no words to say

  15. Avyaaja Karunaa Murthyai Namaha! Showing compassion unconditionally! It is one of the concluding Naamaas of Sri Lalitha Sahasranaamam! Goddess Kamaakshi and Maha Periyavaa are the same! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!.

  16. let us all do bhakthi…. oru naal nam veetukkum periva varuvaaaaaaaa….. mahaperiva saranam

  17. The greatest mahan on the earth and we were fortunate to live during his Avatar. HH Mahaperiyava sent his blessings to me soon after his Kanakabishekam Cermoney in May 1993 through one of his disciple whom I have never met, that is another sacred and divine story.

  18. Shankara!!! Nadamaadum Deivam.

Leave a Reply to GOPAL KRISHNANACancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading