‘Thanjavur Station Thief’, ‘அப்படித்தானே நரசிம்மா ?’, 2013 Sani Pradosham dates

Never seen Him like this2

 

 

1) 2013 Sani Pradosham dates

 

இந்த 2013ம் ஆண்டில் 5 சனி பிரதோஷங்கள்!

2013ம் ஆண்டில் 5 சனி பிரதோஷங்கள் வருகிறது.பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பிரதோஷத்தில் வரும் சனி பிரதோஷம், மகா பிரதோஷமாகும். இந்த ஆண்டு சனிபிரதோஷம் 5 நாட்கள் வருகிறது.

வரும் பிப்-23,

மார்ச்-9,

ஜூலை-20,

நவம்பர்-30,

டிசம்பர்-14

ஆகிய 5 நாட்களும் சனி பிரதோஷ நாட்களாகும்.

மாதத்திற்கு இரு நாட்கள் பிரதோஷம் வரும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,15,30 ஆகிய மூன்று தேதிகளில் பிரதோஷம் வருவதால் மொத்தம் 25 பிரதோஷம் ஆகிறது.

இதில் 5 சனி பிரதோஷமாகும்.இந்த வருடம் வரும் 9ம் தேதி முதல் பிரதோஷம் வருகிறது. டிசம்பர் 30ம் தேதிகடைசி பிரதோஷம் . சனி பிரதோஷ வழிபாடு செய்தால் பெரும் நன்மை அளிக்கிறது.

 

2)  ‘Thanjavur Station Thief’

மகா பெரியவாளை முதல் முதலாக காஞ்சியில் தரிசிக்க வந்த தம்பதிகள், அந்த பிரசாதத்தை வாங்கிகொண்டு ரயிலில் தஞ்சை போக முடிவு செய்தனர். ஸ்டேஷனில் இறங்கி டிக்கெட்டை எடுக்க பர்ஸைத் தேடியபோது, அது அங்கே இல்லை. பர்ஸ் காணாமல்போனது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. பர்ஸுக்குள் இருந்த மகானின் பிரசாதம் அல்லவா காணமல் போய்விட்டது என்கிற கவலைதான் அவர்களுக்கு.

தங்கள் ஊரான பெங்களுருக்கு போன பிறகும் இதே கவலையாக இருந்தபோது, எல்லாம் தெரிந்த மகான் அவர் கனவில் தோன்றி, “உனக்கு பிரசாதம் பத்திரமாக வந்து சேரும்”, என்றார்.

அவரது அருள் வாக்கு பொய்க்குமா என்ன?

கனவில் அருளியது போலவே, மறுநாள் தபாலில் ஒரு கவர் வந்தது.

உள்ளே ஒரு கடிதம்.

“நான்தான் உங்கள் பர்ஸை திருடினேன். நீங்கள் அதில் அட்ரஸ் வைத்து இருந்தீர்கள் – பணத்தை எடுத்துக்கொண்ட நான், அதில் இருந்த பிரசாதத்தை தூக்கி எறிய மனமில்லாமல், உங்களுக்கே அனுப்பியிருக்கிறே& #2985;்.

இப்படிக்கு
தஞ்சாவூர் ஸ்டேஷன் திருடன் ”

திருடனுக்கும் அப்பிரசாதத்தை திருப்பி அனுப்பத் தோன்றியது மகானின் கருணை உள்ளத்தால் தானே?

 

3) ‘அப்படித்தானே நரசிம்மா ?’

காஞ்சி மஹா பெரியவர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர் அந்த தம்பதியினர். காஞ்சி மஹானை வணங்காமல் எந்த செயலையும் ஆரம்பிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மீது அவர்களுக்கு பக்தி.

இந்நிலையில் ஒரு நாள், அந்த பெண்மனி கர்ப்பிணி ஆனாள். குழந்தை எந்த பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று அவர்கள் மஹானை வேண்டாத நாளே இல்லை.

ஒரு நாள் இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் கனவில் நரசிம்மர் தோன்றி, பிறக்கப்போகும் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுமாறு உத்தரவிட்டார்.

ஆனால், கர்ப்பிணிப் பெண்ணோ, ‘எங்களுக்கு எல்லாமே காஞ்சி பெரியவர்தான். அவர் எப்படிச் சொல்கிறாரோ அதைத்தான் செய்வோம்’ என்று தெய்வத்திடமே வாதிட்டாள் கனவில்.!

நரசிம்மரும் அந்த பெண்ணை அவளது வழிக்கு விடவில்லை. ‘எனது பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று அவரும் உறுதியாக இருந்தார்.

அப்போதே கனவும் கலைந்து விட்டது. விழித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இறைவன் இட்ட உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்ற பயம் ஏற்பட்டது. இருந்தாலும், தான் கண்ட கனவு பற்றி கணவரிடம் கூறினாள்.

தொடர்ந்து, இருவரும் காஞ்சி மஹானை கேட்ட பிறகு, அது பற்றி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தனர்.

அடுத்த மாதமே அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை உறுதி செய்ய இருவரும் குழந்தையுடன் காஞ்சி மஹா பெரியவரை பார்க்கச் சென்றனர்.

மஹான் காலடியில் குழந்தையை கிடத்தியவர்கள், மஹான் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்கும் பொருட்டு அமைதியாக நின்றனர்.

கை, காலை உதைத்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த மஹா பெரியவர், “பொதுவாக ஒரு குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகள் செய்வார்கள். அதன் பிறகுதான் பெயர் சூட்டுவார்கள். ஆனால், இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான். அப்படித்தானே நரசிம்மா ?” என்று கேட்க, குழந்தையின் பெற்றோர் அதிசயித்துப் போய் நின்றனர்.

தாங்கள் கண்ட கனவு பற்றி மஹா பெரியவரிடம் எதுவும் சொல்லாத நிலையில், அவரே கனவில் வந்த நரசிம்மர் கூறியபடி குழந்தையை ‘நரசிம்மா’’ என்று அழைத்ததால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி, அப்படியே சாஷ்டாங்கமாக மஹா பெரியவரின் காலில் விழுந்தனர்.

 

***************

Thanks a ton to Shri Vasan Srini for the Sani Pradosham dates, and Smt Aparna Mukandan for the other teo lovely posts (from periva.proboards.com) for posting these in ‘Sage of Kanchi’ forum in Facebook.



Categories: Devotee Experiences

8 replies

  1. May Maha Periyava Bless us all. Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Balasubramanian NR

  2. jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara

  3. i dont know if i am right but it is not mainly because that we might forget our culture and ethics but also we will leave our anushtanams for the days we travel by ship and also pollute the sea and ocean with our morning ablations etc. i dont know how many of our readers know that because bombay is an island and one has to cross the sea to reach Bombay, hh periava has not gone to Bombay even though he has gone up to Pune!!!! it is a question of ones own conscience and also practice what he/she preaches. if we satisfy our conscience without betraying our own conscience and also try to practice what we preach, periava will be satisfied. not a day passes without my crying that our culture is fading and ethics failing in India much more than what happens through our Indians in West or foreign countries!!!!!I am happy that our culture is somewhat growing in West though fading here!!!!!To quote a simple incident, Vittaldas (as he is popularly known as JKD) does Bhajans during 31st Dec. Midnight to ensure that if not interested in bhajans at least persons will not go to parlours and bars to celebrate/revel the new year!!!!!I appreciate the thoughts expressed above. May Mahaperiava bless us all. n.ramaswami

  4. If not blessed to see the Mahan in person or see the miracles, we are all blessed to hear the greatness of Sri maha Periyaval through the experiences of others. He has blessed all those who surrendered completely to him,

  5. Dear all divine lovers,followers,We are all fortunate to experience the DIVINE GRACE of OM SRI MAHAPERIYAR AND OTHER SAINTS.Why our
    gurus doesnot relish going to foreign countries for the sake of job etc because of the fear that our culture will fade away.That has become true
    as many indians settled in foreign countries have decided to stay permanently there.The upcoming generations living there fails to realise
    the need to understand our religion.This is a worrysome factor. Those who sincerely follow our religion will not violate our acharya’s directives.

    OM JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.

  6. Our Swamigal is GOD to the believers, ” NAMBE NORKAVAR NATARAJAN “,

    PARVAI ONDRU POTHUME,NAMUL IRUKUM PAPAM ELLAM VELAKUME,
    KANCHIVAZUM GURU NATHAR ARUL PARVAI ONDRU PATTAL,
    KASTAMELLAM VELAKUME, NAM THUNBAM ELLAM THULAYUME,
    KOTI NANMAIKAL CHERUM, GURUNATHAR DARSHANATHAAL,
    NAM VAZKAI ORU ARTHAM CHERUME GURUNATHAR ARULAL
    NAM VAZKAIKUM ARTHAM CHERUME GURUNATHAR ARULAL (PARVAI ONDRU POTHUME…..NAMUL IRUKUM PAPAM ELLAM VELAKUME)

  7. Words are not adequate to describe his greatness.

Leave a Reply to shyamala Cancel reply

%d bloggers like this: