உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

If you remember Trichy Sri Radhakrishna Sastrigal’s interview, he had this same problem and went to Periyava for help. Periyava answered exactly the same way as below…..

பெரியவாளுடைய இந்த அறிவுரை  நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர்.  அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது.  பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார்.  நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும்.  இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும்  பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ…….இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே?  நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும்  அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார்.  அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே!  மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே……….என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?……..நம்பிக்கைதான் எல்லாம்.  அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?…………. எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.



Categories: Devotee Experiences

Tags:

15 replies

  1. Mind is always mixed up with so many thoughts.if a person try to control it ,then it is very sure mind will move from the person with great speed and will slip from one to another.Even when our body is taking rest,the mind will shift from one to another,and some dreams will haunt the person, it may be good or bad.,so getting concentration on a particular thing or a subject is not so easy.Every thing is connected with discipline in our life and our behaviour Pray to Periyava for the concentration,then every thing will become so easy.

  2. This karvetnagar is on the Puttur Chittoor route, which goes via Karvetnagar/Kollagunta etc. It goes thro interior villages and beautiful surroundings.
    When maha periyaval was camping on the banks of that river and in a small tatched shed = specially erected for maha periyaval, I had the wonderful, happy opportunity of seeing maha periyaval just coming after bath in that rivulet and had very good darshan with my company = Burmah-Shell = Engineer, a wonderful person, who is no more, and two things I must say here. One, my life was saved as we had to cross a very narrow culvert between Puttur and Kollagunta( just after Karvetnagar ), and just before the culvert, in order to help people to go slow over the culvert they have made speed breakers on both sides of the culvert. I did not see that and went past the culvert in my Ambassador car MDA 8523 – 1970/74 – exact year I have now forgotten = and He only saved my life and my car, we reached the other side and had wonderful darshan of Maha Periyaval.

    We had an outlet at Kollagunta – hand operated Hammond Pump = Olden days British pump = purely for diesel for agricultural purposes. This was installed in the 1960s. Famous bus operator in Puttur helped people in that area to go and come after Periyaval’s darshan as it was a typical village without much crowd.

  3. jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara
    jaya jaya sankara hara hara sankara

  4. Ahter reading this I felt as though Periyava has talked this for people like me.
    T.G.Prabhakar

  5. For all of us Sivan sakthi Vishnu lakshmi is Maha Periyava we shall all pray to Him to Guide us To Right direction and Path

    I beleive That Sincere prayer TO HIm Never fails

  6. Mahaperiyaval’s advices lead us in the righteous path when we adhere strictly.
    Hara Hara Sankara,
    Jaya Jaya Sankara.

  7. It is an eye opener to all who are in the jungle in search of the garden,
    T.S.S

  8. Yes. It is really an instruction to all as to how one should devote, Have complete faith in your prayers, That is the message of periyava..Let us follow the said guideline.
    T.S.S.

  9. Maha Periyava appears to be harsh on people who seem to be intellectually superior. Remember the ‘Vinayukuni’ singer? Perhaps the lesson is to do good karmas, pray regularly to Him and ask Him to take care of us. He will surely do so! Bhagavan Ramakrishna Paramahamsar has said that one should cry to Parasakthi, the same way a child cries to its mother, while one is praying.

  10. anantharaman viswanathan,adambakkam
    Sree Maha Periyava taught a good lesson to all.When we deicate ourselves to him he will take care every thing.Instead, for our mental satisfaction we are running here and there.

  11. i agree sir but what about people like me or mettur swamigal whose only upasana deivam is periava!!!!!!!!! yes Deivam ennoda paesi irukkirathu, paesikonde irukkirathe!!!!!puriyaratha!!!!!

  12. Deivathin kural.

  13. 100% correct but still my mind can’t concernate i n daivam chinthanai

    • Sri Ganesh: Namaskaram. When you are saying “my mind can’t concentrate in daivam chinthanai”, I am reminded of my own predicament. Although I used to spend on an average about 7 hrs everyday in meditation, I was unable to control my thoughts which used to return to thoughts on Sex most of the time. I was frustrated and disgusted with myself. One day I cried before my deity narrating my problem. Ever since “those” thoughts seem to have taken leave of me, and I have peaceful meditation these days. But it took nearly 6 years of 7 hr meditation everyday to reach there. And now with the direction of Sri Periyavaa on this score, I am sure you should be able to find your way out. With best wishes,

Leave a Reply

%d bloggers like this: