பசுபதி கோபாலன்

 

“பசு இன்னா இப்டி ஒதைக்குது? கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது! ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே! இதென்னா அக்குறும்பு?’என்று அலுத்து கொள்கிறார், ஸ்ரீ மடத்து இடையர்.

உள்ளே நம்ம பெரியவா குறும்பு குழந்தையாக சிரித்து கொள்கிறார்.

“பாதி ராத்ரில கன்னு “அம்மா”ன்னு  கத்தித்து [தம் வயிற்றை தட்டி காட்டி] அதுக்கு போறலைன்னு தெரிஞ்சுது.நான்தான் யாருக்கும் தெரியாம போய் [தம் திருட்டுத்தனத்தை தாமே ரசித்து நகைத்து]  கன்னை அவுத்து விட்டேன். அது வயிறு முட்ட முட்ட ஊட்டித்து, அப்புறம்……எங்கேயாவது ஓடிட போறதேன்னு பிடிச்சு கட்டிட்டும் வந்துட்டேன். அதுதான்  கறக்க விடமாட்டேங்கறது!”என்றார் அருகிலிருந்தவர்களிடம்.

இம்மாதிரி நிகழ்ச்சி பலமுறை நடந்ததுண்டு!

—————————————————————————————————————

பசுக்கள் தண்ணீர் பருகுவதை அன்பு நயனங்களால் பருகிகொண்டிருந்த பெரியவாளிடம், ஒரு கன்று துள்ளி ஓடிச்சென்றது.  புனித திருவுருவின் மீதே அது உராய்ந்து நிற்க, பாரிஷதர்கள் அதை பிடித்து கட்ட விரைந்தனர்.

பெரியவா “வேண்டாம்” என்று சைகை செய்தார்.  யாருமே தீண்டாத தெய்வ திருமேனியை உராய்ந்து, பேறு பெற்றுக்கொண்டிருந்தது அந்த கன்று சற்று ஸ்வாதீனம் பெற்று, பெரியவாளின் உள்ளங்காலை மோந்து, நக்கவும் தொடங்க, உள்ளம் நிறைந்த அவரும் அதை முதுகை கோதி கொடுத்தார்.

சரியாக அந்த சமயம். வடமதுரையிலிருந்து வந்த ஒரு சாது, பெரியவாளின் திருக்கோலத்தை கண்டதும் ஆனந்த பாஷ்பம் அடைந்தார்.

“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமே கண்டேனே!” என்று நா தழுவி தழுக்க கூறினார்.

விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை சாதுவிற்கு அருளினார்.



Categories: Devotee Experiences

7 replies

  1. LONG BACK I REMEMBER MAHA PERIYA’S UPADESAM FOR FEEDING COWS WITH THE DAILY VEGETABLE WASTES, WHICH WE THROW IN THE DUST BIN AND THEY GIVE ROTTEN SMELL. FOR THE FEW MONTHS IT SO HAPPENED THAT I SPOTTED JUST ACROSS THE ROAD OF MY OFFICE A BEAUTIFUL SET OF COW AND CALF. DAILY I HAVE BEEN BRINGING THE CABBAGE, CAULIFLOWER, ‘KEERAI’, ‘MUTTER BEAN AND OTHER VEGETABLE WASTES WHICH THE COW AND ITS CALF EAT IN NO TIME. I ALSO BRING ALL SKINS OF FRUITS LIKE BANANA, POMEGRANATE, AND THEY EAT THEM TOO. THIS SIMPLE TECHNIQUE WAS GUIDED BY MAHA PERIYAVA ONLY, AND THAT IS MY DAILY HAPPIEST MOMENT.

  2. Thank you very much for this Grand posting ..Periyava”s Photo Looks very much beautiful and draw all of us to his Mukha Sarojam…We seek his blessings. Why we should we think Maha Periyava Left as orphen,He Never leave us alone,He has shown so much good path to follow in this world.If we chant the clarion Call mantra “Hara Hara Sankara” Jaya Jaya Sankara” continously for five minutes in our home,you will find his presence very well at our home. please believe Periyava is with us only. and that will become true in our life.

  3. Thanks for the classic photo Mahesh. What a compassion, karunyam, vaatsalyam on his face and eyes. Unable to control tears.

    Maha Periyavaa, Why did you leave us orphaned? Eppirappil Kaanbom Ungalai ini.

    Maha Periyavaa, Maha Periyavaa, Maha Periyavaa Thiruvadi Saranam

  4. Dear all DIVINE lovers/followers,The cow calf that licked swami’s feet has certainly attained MOKSHAM.No difference among GODS.The only one
    BRAHMAM assumes various divine forms in various names.

    OM NAMA
    PARVATHI PATHAYE HARA HARA MAHADEVA.

  5. Such kindness towards animals.

  6. GREAT MAHA PERIYAVA

  7. இது போன்ற சம்பவங்களை நாம் கூட இருந்து பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்து கொள்கிறேன் ஸ்ரீ பெரியவாளால் மட்டுமே இதுபோன்று அன்பை கட்ட முடியும்.

Leave a Reply to K.S.ViswanathanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading