காமாக்ஷியும் மீனாக்ஷியும்

 Narayanan Bala on his new drawing::
இங்கே ஒரு சித்திரம் POST பண்ணியிருக்கேன். மஹாபெரியவாளுடைய சித்திரம். இதை முடித்த பிறகுதான் இதில் என் நண்பர் சுட்டிக்காட்டிய ஒரு சூக்ஷுமம், தானாகவே, என்னையும் அறியாமல் விழுந்திருப்பதைக் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன்.

அதனால்தான் இதன் தலைப்பு ‘காமாக்ஷியும் மீனாக்ஷியும்’. மஹாபெரியவாளைத் தரிசித்த கோடி கோடி மாந்தர்களில் பலரும் அவரை காஞ்சி காமாக்ஷியாகவே கண்டிருந்தனர்.

மஹபெரியவாளுக்கு எல்லா தெய்வங்களிலேயும், காஞ்சி காமாக்ஷியிடம் ஒரு பக்ஷ பாதம் உண்டு. இதை அவரே சில இடங்களில் கூறியிருக்கிறார். ஒரு முறை ரா.கணபதி அண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கை;யில், “……எனக்கு எல்லா ஸ்வாமிக்குள்ளேயும; அம்பாள்னா தனி முக்கியம்.அந்த அம்பாளே பல ரூபங்களிலே இருக்கறதுலே, காமாக்ஷின்னா தனி முக்கியம்னு ஒரு பக்ஷ பாதம்….” ( ஸ்ரீ ரா.கணபதி எழுதிய ‘மஹாபெரியவாள் விருந்து’ என்ற புத்தகத்தில் பக்கம் 28).

இந்தப் படம் வரைய ஆரம்பிக்கும்போது, அவரை மட்டும் தனியாகப் வரையாமல் ஒரு கோவில் கோபுரத்தையும் சேர்த்துப் போடுவோமே என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன். என்னிடம் நண்பர் கொடுத்த ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுர ஃபோட்டோ இருந்தது. அதையே வரைந்து விடலாம் என்று முடிவு பண்ணி, வரைந்து முடித்தேன்.

காஞ்சி காமாக்ஷியும் மதுரை மீனாக்ஷியும் ஒரே சித்திரத்தில் சேர்ந்து அமைந்து விட்டது மஹாபெரியவாள் அனுக்ரஹம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

DSCF8251


Categories: Photos

19 replies

  1. OUR SASTANGA A ANANTHA KOTI NAMASKARANGAAL AT THE LOTUS FEET OF OUR ACHARYAL.

  2. I had the God Gifted oppurtunity to meet Mahaperiyava in the year 1986 & again in 1987 at Kanchi Math along with my maternal grandmother and my two younger brothers.That was the time when we had just relocated to Chennai,then called Madras from Bangalore after some domestic disturbance in our family.My grandmother introduced me and my two brothers to Mahaperiyava,I clearly remember Periyavaa was resting on the wall,he reassured us and gave a mango each to me and my brothers.Inspite of many ups & downs even today if we are able to survive with some self respect,it’s only for the Divine Grace of Mahaperiyavaa.

    I owe my everything to Mahaperiyavaa

    Venkataramanan Ramasethu
    Kolkata

  3. Can it get more divine. What an awesome piece of art Shri Narayanan. It is too good to be true. Sarveshwara.

  4. ஏன் என்றால் தண்டநாதா சேனைகளின் தலைவி. மத்ரிணீ மந்திரிகளின் ஆலோசனை சொல்லுபவள். உலகுக்கே ராணி ஆன நான்குகர ஸ்ரீ காமாக்ஷிக்கு இவர்கள் மந்த் ராலோசனை மற்றும் படை தளபதிகள்.

  5. ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காமாக்ஷி தேவியை ஸ்ரீ ராஜராஜெஸ்வரிக்கு ஒப்பிட்டு ஸ்ரீ மீனாக்ஷி தேவியை மந்திரிணி தேவிக்கும் திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியை ஸ்ரீ தண்டநாதா தேவிக்கும் ஒப்பிட்டு மகிழ் ந்ததை படித்த ஞாபகத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

  6. VSK rightly stated that if we are unable to do better things we should atleast follow Periyaval teachings so that we can think about to do good things.

  7. MAHA PERIAYAVA GREAT

  8. Hara Hara Sankara!
    Jaya Jaya Sankara!

  9. மஹா பெரியவாளின் சித்திரத்தை சற்றே உற்று பாருங்கள். மஹா பெரியாவளின் வலது தோளில் சிறிய கிளி ஒன்று தெரிகிறது சற்றே தலையை வலது பக்கம் சாய்த்து பாருங்கள், கிளி ஒன்று சற்றே கீழ் நோக்கி பார்க்கிறது. மீநாக்ஷி அம்பாள் காமாக்ஷி அம்பாளின் தோள்களில் வீற்றிருப்பதை காணும் பாக்கியம் மஹா பெரியவாளின் அருளே.

    கோடி கோடி அடியவர்களில் கடை கோடி அடியவனின் சரணங்கள் .

  10. Guru kataksham and Gopura darsanam is something everyone of us yearn for. Great work. Jaya Jaya Sankara Hara Hara sankara.

  11. Nameskaram.

    Daily I get eMail about “Sage of Kanchi”, this links drag me into “MahaPeriyavas” — Padham — Good idea to have is Padaham in the top. What I can say, not only know about Him have Darahshan of Him I am so blessed I born as a Tamilian — It is all because of Him — Guru Chadrasekaram — what else

  12. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  13. For Sri Maha Periyaval, both Kamakshi and Meenakshi are same, as both are different incarnations of Ambal. Happy to see both of them togetther.Jaya Jaya Sankara.

  14. Its our great “bhagyam” to have darshan of both Kanchi Kamakshi and Meenakshi..

  15. Yes!! mahaperiyava is saksaat shivaa!

  16. In fact it is a great opportunity for us to have a glimpse of both Kamakshi and Meenakshi at a time.

    Balasubramanian NR

  17. Blessed I am to have Darshan of both the Two Deities.
    Hara Hara Sankara,
    jaya Jaya Sankara.

  18. maha periyaval performed the kumbashekam of the meenakshi temple and was very particular about muukuruni pilliyar temple

    the coconut in the hand symbolise the muukurni pilliyar which is in the entrance of the temple, we are all blessed to have his darshan

    we should at least try to follow his teachings

Leave a Reply

%d bloggers like this: