“சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்””

Him15 Rojappoo
நேத்திக்கு ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம்  பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது.   ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு,  சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.

“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.

காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.

குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.

ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.

வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?

புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!

கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

*****

From the book ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே — ஆர்.பொன்னம்மாள்.

Typed and posted by Shri Varagooran Narayanan in Sage of Kanchi group in Facebook. Thanks a ton Sir!



Categories: Devotee Experiences, Upanyasam

15 replies

  1. What a blissful anugraham on the right way to anushtanams.

    Mahaperiyava Charanam

  2. avan arulaalee avan thaal vanangi….. so praying to mahaperiva to bless

  3. At the initial stage getting concentration is a difficult thing,but once you firmly decide that you will do that without caring any out side compulsion to block it,then your chance to benefit the situation start.Please never stop your mission once started,march on.If you want to walk 10 kilometers,if you put your first step,that much is over,by doing so you will reach the destination and won your target.There may be difficulty and obstructions,but dont care March on till your goal is reached.You will won at last.then every thing will become Boo boo for you. Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  4. Dear all DIVINE lovers/followers, This explanation By our ACHARYA about the way of doing poojas to attain DIVINE GRACE is welcome.
    When we have ability/time to concentrate on wordly affairs,can’t we find time to concentrate on the DIVINE.?.Of course DIVINE is ever living.
    I have seen many people pretending to be doing poojas when their mind is set on nondivine things such as office etc.They never gets benefitted
    from that.DON’T DO POOJAS ETC W/O DEVOTION/LOVE TOWARDS DIVINE.

    FOLLOW DIVINE WITH TRUTH IN MIND/SOUL.POOJAS/FUNCTIONS DONE W/O IT’S DUE CONCENTRATION SHAMES THE VERY PURPOSE OF
    IT’S EXISTENCE..GOD THE ULTIMATE TRUTH,TRIUMPH,BLISS,JOY.OM JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.OM NAMA PARVATHY
    PATHAYE HARA HARA MAHA DEVA.ALL DIVINE BLESSES NOBLE.

  5. அருமையான வார்த்தைகள் அருமையான தத்துவம் . தாய் பக்கத்தில் இருந்த குழந்தையை கவனித்து கொள்வது போல் நாமும் பகவான் முன்பு நின்று வேண்டிக்கொள்ளவேண்டும். உங்கள் யோசனைக்கு நன்றி.ஜெய ஜெய சங்கரா

  6. Maha Periyavalai நெனைச்சு தியானம் பண்ணினாலே கருணை செய்கிறவாளாச்சே! We have to pray Maha Periyavaa to make the “Baghavan’ as Theppam in our mind.

    kodi Kodi adiyavaril nanthan kadai kodi adiyavan.

  7. HARA HARA SANKARA!
    JAYA JAYA SANKARA!

  8. Very simple and practical advice by Maha PeriyavaL. Thanks for posting.

  9. It is an wonderful example for many of us, particularly with reference to attention and attachment
    towards God.

    Balasubramanian NR

  10. Wonderful explanation.

  11. who else will be able to tell what goes on in devotees mind .. samsaara sagarathil, lowkeeka vishayangalil sambandhapattu irukkumbodhu
    yaar enna sonnaalum avvalu seekiram manasai vellamudiyadhu .. oru kuripitta vayadhu vandhavudan, konjam konjamaaga bhaarathai
    irakki vaithuvittu oru saamaaniyamaana vaazhkai vaazha aarambikka vendum .. appodhu dhaan manam poornamaaga iravanidan sellum ..

  12. The script is absolutely undecipherable. Many such mails are recd. Will you pl. ensure such ones are  sent in a decipherable way, pl.

    ________________________________

  13. Even if the prayer is for a few mts. the same should be performed in the presence of the Lord in our thoughts.This will result in good results as days roll on.

  14. Very simple advice.
    Easy to adhere.

  15. wonderful eye opening write-up for many housewives who recite slokas doing household work. If we sit and concenteate the bliss and benefit will be much more. absolutely true
    Meena Sridharbalan

Leave a Reply to shyamala subramanianCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading