“முடிந்த போதெல்லாம் ருத்ரம் – ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு…”


உண்மையான பக்தியுடைய அடியார். ஸ்ரீமடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார்.

அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம்,தவிப்பு, கவலை.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி,” நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்” என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாளுக்கு அந்த அன்பரைப்பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர்,கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர்.அப்படிப்பட்டவரை, ‘ யாத்திரை போய் வா’ என்பதா ?’ உபாசனை செய்’ என்பதா ? கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய் என்பதா ?..’உனக்கு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா ?’

‘தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லிருக்கேன்..’

‘ஸ்ரீருத்ர சமகம் ?’

‘புஸ்தகத்தைப் பார்த்து ஒழுங்காகச் சொல்லிடுவேன்..’

‘பாதகமில்லை.. முடிந்த போதெல்லாம் ருத்ரம் – ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு.. போதும் ..’

வந்தனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக்கொண்டு போனார்.அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக்கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

‘அவரா ?…அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார் !… எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான் ! தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்..’

அவர் வெகுநாள்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உடலை உகுத்தாராம்.

பெரியவா உபதேசம் அவருக்கு மட்டும் தானா ?
அல்லது, பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா ?

*******
Thanks a ton to Shri Venkataraman Subramanian who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences, Mahesh's Picks

9 replies

 1. THANKS A TON FOR SHARING MY POST…
  MAHAPERIYAVA SHARANAM….

  Venkataraman Subramanian
  Mumbai….

 2. it seems like Periyava said this to me. I will tell you why – I started learning Vedas bit late in my mid-30s. always feel like I know nothing when compared to others. I got hold of Sri Ruram well with His blessings. I can chant Vishnu sahasranamam only with the help of the book – shame on me!. been an idiot for most part of my lif without learning things at the right age…..I constantly ask the question “how am I going to survive?”…I guess Periyava answered….what more one wants other than giving up the sareera while chanting Sri Rudram.

  Thanks Suresh for the post…..if you don’t mind, please mark this post as “Mahesh’s pick”..

 3. i dont know if i should divulge it but there is one IAS youngster who is of the rank of additional secretary and who is now in world bank. He is meticulous in sandhyavandhanam and sahasranama chanting that in the evening between 6 pm and 7 pm even chief minister of a state cannot get him and the reply from his house would be ‘avan sahasranamam japichundirukkan’ (he is reciting sahasranamam). that is the power of these. the power of vishnusahasranama japa in the evenings particularly is immense. you can recite sahasranama anytime anywhere even in the car!!!!when we walk with periava we recite only sahasranamam and we dont know how far we have walked and how many times we have recited. please do so. oh periavale anugraham pannungo ellarukkum!!!! n.ramaswami

 4. This shows the greatness of Sri Maha Periyava. Jaya Jaya Shankara Hara hara Shankara

 5. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

 6. Way. Back. In 1980. Once I was. Having darshann a bank manager from Indian overseas bank , chettiyar family

  Requested periyaval that his daughter should be married and wanted. The blessings of periyaval.

  Maha. Periyaval told the husband to chant Om Namachivaya. And. The. Wife. To chant. Shivaya Nama OM

  Six months later the same manager came with his new son in law and daughter and sought the blessings recalling the upadesam of periyaval

  I think it is the Guru. Upadsam for all of us

  Karthikeyan
  Chandigarh

 7. Om Nama Shivaaya! Om Namo NaaraayaNaaya! Great Upadesam for all of us!

 8. What can mere mortals like us say about his greatness?

 9. Thank you for posting this input. In fact, the same was advised to me by the Pujya Shri Jayendra Saraswathi
  Swamigal Periyaval when I visited recently to Kanchipuram along with a Bhikshavandanam Team.

  Balasubramanian NR

Leave a Reply

%d bloggers like this: