“எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் வாங்கித் தரச்சொன்னேன்”

பிராம்மணன் கடல் கடந்து போகக்கூடாது என்பது சாஸ்த்ரம். ஆனால், தற்போதைய சூழ்நிலை தாய்நாட்டில் சொந்த மண்ணில் அவனை ஸ்வதர்மத்தில் பிழைக்க விடாமல் பண்ணியதோடு பிறரோடும் அவன் சேர்ந்து முன்னேறி வரக்கூடாது என்ற “நல்லெண்ணவாதிகளின்” சட்டத்தால் இன்று பல பிராம்மணர்கள் தூரதேசங்களில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் அந்த தேசங்கள் மிகுந்த பயனை அடைகின்றன. இப்படித்தான் ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, பெரியவாளுக்கு ஒப்பாததை செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.

ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம் என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக காஞ்சிபுரத்துக்கு விரைந்தார். அதேநாள் காலை பெரியவா சமையல் பண்ணும் பாரிஷதர்களை கூப்பிட்டார்….

“இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?…”

அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல் என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள். அதில் சிலவற்றை மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.

“க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு…அப்றம் வா……” எல்லாருக்கும் ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர் சாப்பிடப் போனதும் அருகிலிருந்த பாரிஷதர்களிடம் “ஏண்டா…..அவன் எனக்கு எதாவுது குடுக்கனும்ன்னா….எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?” என்று சந்தேஹம் வேறு கேட்டார். அசந்து போனார்கள்! “அதைக் குடு, இதைக் குடு” என்று கேட்டறியாத பரப்ரம்மம் “எதைக் கேக்கலாம்?” என்று கேட்டால், என்ன பதில் சொல்வது?

அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே “என்ன? ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?” என்றார். பக்தரின் கண்களோ கரகரவென்று கண்ணீரை பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து பெரியவா சொன்னார்….

“இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட குடிக்கலை….என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட கெளம்பி வந்திருக்கான்…..என்ன நான் சொல்றது செரியா?..” அவருடைய புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்.

இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம்…..”இந்தா…..இவனை அழைச்சிண்டு போயி, எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி, வாங்கி வெச்சுக்கோங்கோ!”……பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. “அல்பமான எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!”

அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள் லீலையில் காரணத்தை சொன்னார்…..

“இவனுக்கு எம்மேல ரொம்…ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கான்….ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும் வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை…..அதுக்காக எம்மேல பக்தியா இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் வாங்கித் தரச்சொன்னேன். எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப் பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ! ஏன்னா…பசுமாட்டுக்கு எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி ஆய்டும்…பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ? அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது ”

தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த “கலவை”யில் உதித்த ஞான சூரியனை சரணடைவோம் !

*****

Thanks a ton to Shri Varagooran Narayanan who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

29 replies

 1. ஸ்ரீ மகாபெரியவா உன்னைத்தான் மலை போல் நம்பி இந்த காரியத்துல இறங்க்கி இறங்யிருக்கேன், என்னை கைவிட்டுடாதே —

 2. Gurunathrin blessings yeppadiyellam poorthi aagum endru nammal ninaithey parkamudiyathu

 3. NOW A DAYS PLENTY OF JOBS ARE AVAILABLE IN INDIA THE BUSINESS HAS DEVELOPED LIKE A VAST OCEAN MAY THE BRAHMINS CAN FIND A SUITABLE EVEN IN INDIA IT IS ENOUGH FOR A PERSON TO EARN RE. 25000/- IN INDIA THAN EARN RE. 100000/- IN U,S,A?

 4. His Holiness is nothing but GOD. LORD SHIVA TOOK AVATHAR & LIVED IN HUMAN FORM FOR 100 YEARS TO PURIFY THIS GLOBE AND BLESS US. I AM TOO SMALL TO PRAISE HIS HOLINESS. BY HIS BLESSINGS LET THIS WORLD LIVE IN PEACE. Ravi, Mannargudi. 094438 06686

 5. karunya moorthy namma periyava

 6. Our Acharyals thoughts are all beyond any bodys reach, .Swamigal never want or like to hurt any bodys feelings but at the same time He never compramise with the existing laws with any one who ever they may be.That is OUr Maha PeriyavAl..The same situation happend to my father who put service in the Royal Air Force during second world war.When my father return home and a marriage too is arranged.Appas great grand father and his two sons (Appas Uncles) they are all Ghanapadigal, grand father asks my father” Enna Sundaresa Oru thadavai kuda Upanayanam Pannanamo”,Sandhyana mantramgal ellam Janapakam erukka, Then my father told him,i never fail to perform Sandhyavandhanam and Gayathri japam in the war field.I have done the both duties ie Airforce duty and my Anustanams,very sincerly.All my superiors never interfear in those things.They expect only the perfect completion of the duties, that is all Onaku ella nanmai kalum undakum,Sampa Parameswaran kuda irukarda.This has happend at Palghat Kalpathi Gramam.Appas Great Grand father was Brahmashri Sankara Gana padigal,His uncles are Brahmashri Sundaresa Ganapadigal, and Brahmashri Visvanatha Gana Padigal. These three Vaidhegas were with Our Maha Periyaval During his visit to kerala in the year 1927,Gandhji then meets our Periyaval at Nellicherry.(Palghat)

 7. SARVESWARN- ANEKA KOTTI NAMASKARAM

 8. Dear and respected Sri Sambandamoorthi,

  If Sri Maha Periyava Blessed you with His Dharsan, no amount of bad thoughts or karma can make one impure. You are as pure as spadikam. There are several scriptures which can be cited for this as pramaanam. As others have observed, merely thinking of Thiruvannamali or Sri Maha Periyava guarantees one moksham!
  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!

 9. when i met PERIYAVA forty five years before, at kanchipuram , in his ahram, i did a sin without my knowledge. That time i was standing before HIM,
  thinking some other

  bad imaginations, when other devotees are seeking HIS blessings. from then onwards i was suffering on many fronts. Still it exists. can anyone guide me to come out of the event. Though i feel often about my mistake done during that time , still my mind has not come to a still. what is the
  “parikaram”

 10. We should have done “bhaakkayams” to have lived in the era when the GREAT SOUL / GOD was…NO NO NO is living

 11. Unable to control my tears. What a blessing.!!!!!

 12. PERIYAVA ANUGRAHAM ELLARUKUM UNDU MANASARA AVARAI NINAITHAL POTHUM

 13. PERIYAVA ANUGRAHAM ELLARUKUM UNDU MANA AVARAI NINAITHAL POTHUM

 14. PERIYAVALA ANUGRAM ELLARUM UNDU GREAT MAHAN

 15. MAHA PERIYAVA PERIYAVA THAN

 16. Nothing short of extreme compassion and love.

 17. viswanathan anantharaman,adambakkam.
  Wonderful experience when we read the event.Sri Maha Periyava gave all solutions for upkeeping the sastras as well as please the bhakthas.

 18. Words cannot express the joy we experience even when we read of such events. Is events the correct word. No; but i do not kanow how to put it.

 19. Extremely blessed devotee. True devotion always triumphs. Maha Periyava never lets us down.

 20. Karunamurthi Kanchi Mahaan! Antha Bhaktharin Bhakthikku eedu iNaiyeethu! kadaiyanaiyum, kadaiththeeRRuvaar antha ParaBrahmam!

 21. No words to say a lucky devotee

  Balasubramanian NR

 22. It is really amazing at the way that Sri Maha Periyava was able know in advance about the mind set of the NRI and make arrangement for his food. Do we need any other evidence why he was loved by the bakthas.? Blessed are those who had such lovable treatment from the holy man.

 23. But should devotees of Mahaperyava go abroad?Can they not surrender themselves to the Grace of HH and remain here?This is my thought.I do not want to decry the devotees who are living abroad.My genuine feeling is that we should try to uphold his beliefs and not deify him citing only miracles and incidents arising out of His grace

 24. Reblogged this on Ramani's blog and commented:
  Saint par Excellence and beyond words!

 25. Dont know what to praise, the endless grace of Maha Swamigal or the immense devotion of the foreign devotee!

 26. Lucky and blessed devotee

 27. However many times we read such episodes, tears do not stop flowing from the eyes! Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

 28. What an incredible blessing for that devotee.

Leave a Reply

%d bloggers like this: