“ஆதி சேஷனாட்டம் புஸ் புஸ்னு சீறறயே!”

இடம்-குமபகோணம்ஸ்ரீமடம். ஸ்ரீஐயன் அனைவருக்கும் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார். சேஷீ பாட்டி வேகமாக உளளேவந்தார். (சேஷீபாட்டி சிறிய அறிமுகம்.பாட்டி தனது 22வது வயதில் வைதவ்யத்தை அடைந்துவிட்டார். அவருக்கு 2குமாரர்கள்.மூத்த குமாரரான ஸ்ரீக்ருஷ்ண மூர்த்தி அவர்கள் கடுமையான ராஜபிளவையால் பாதிக்கப்பட்டு ஸ்ரீரமணர் பாதத்தை அடைந்துவிட்டார்.பாட்டிக்கு தாங்காத புத்ரசோகம் அதோடு2ஆம் குமாரர் சகோதரரின் பிரிவால் விரக்தி மேலிட்டு குடும்ப வாழ்க்கையே வேண்டாமென பரமவிரக்தராய் இருந்துவந்தார்.அது பாட்டிக்கு மேலும் துக்கத்தை வளர்த்தது.பாட்டிக்கு ஒரே ஆறுதல்கோவில்களிலும் ஸ்ரீஐயன்சன்னதிகளிலும் விதவிதமாய் கோலம்போடுவதுதான்)பாட்டி கோலம் போட்டு பின் தன் தலைப்பிலிருந்து சில நெல்லிக்கனிகளை வைத்து வந்தனம் செய்தார்.

இனி அவர்களின் சம்பாஷனையை கவனிப்போம்.

என்ன சேஷி என்ன சேதி! உள்ளங்கை நெல்லிகனியா உனக்கு என்ன தெரிஞ்சுக்கனும்!

நா தெரியாமத்தான் கேக்கறேன் உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா? சொன்னாத்தானே தெரியும்! குரு வேலய விட்டுட்டான்.

அப்பாடா! நல்லகாலம்.

இது உங்க வேலதானா? நீங்க பன்றது நியாயமா? அவனுக்கு ஒரு கல்யாணம்,கார்த்தி பன்னவேண்டாமா?நா சொச்சகாலத்த எத ஆதாரமாக்கொண்டு கடத்தறது?டவுன்ஹைஸ்கூல் வாத்யார் உத்யோகத்த இப்படி விடுவாளா? என பொரிந்துக்கொட்டினார்பாட்டி.

உனக்கு சேஷீன்னு சரியாத்தான் பேர் வெச்சுருக்கா! ஆதி சேஷனாட்டம் புஸ் புஸ்னு சீறறயே! என்று சொல்லிசிரித்தார் ஸ்ரீஐயன்.

பாட்டியும் கொஞ்சம் தணிந்து, நா ஆர்கிட்ட சொல்லறது? எனக்கு ஆரிருக்கா உங்கள விட்டா, வேலய விட்டுட்டானே என்னடா பன்னப்போறன்னு கேட்டா வேப்பத்தூர் ஸுப்ரமண்யஸாஸ்திரிகளிடம் வேதாந்தம் வாசிக்கப்போறேன்னு சொல்றான். காலக்ஷேபம் கஷ்டமாயிடுத்தோன்னோ! அதான் கவல, உங்கள்ட்ட கொட்டிட்டேன், உங்கபாடு பத்து எனச்சொல்லி வந்தனம்செய்தார். நம்ஐயனோ ஒர் மாயப்புன்னகை புரிந்தார். பாரே மயங்கும் பாட்டி மயங்கமாட்டாளா என்ன? வந்தவேலை முடிந்தது பாட்டி போய்விட்டார். அம்முறை கேம்ப் முடிந்து ஸ்ரீஐயனும் புறப்பட்டார்.

சரியாக ஒருவருடம் சென்றபின் மீண்டும் கேம்ப் வந்தது. இம்முறை பாட்டி போகவில்லை மடத்திற்கு. பிள்ளையை பார்த்து,பார்த்து நொந்து போயிருந்தார். அவர்2ம் குமாரரோ வேதாந்தம் வாசித்துக்கொண்டும் அதிஆசாரத்துடன் பரம விரக்தராய் இருந்துவந்தார்.சேஷிப்பாட்டியின் அம்மா லக்ஷ்மிபாட்டியும் இவர்களோடு தானிருந்தார்.

ஒர்நாள் அதிகாலை 5மணிக்கு வாசல் கதவு படபடவென தட்டப்பட்டது. பாட்டி அதிகாலையே காவேரிஸ்நாநம் செய்து விட்டு வந்து ஜபம்செய்கிறார், பாட்டியின் பிள்ளையும் ஸ்நாநாதிகளை முடித்து, ஸஹஸ்ர காயத்ரி நின்றுகொண்டு பன்னுகிறார். லக்ஷ்மீ பாட்டிக்கு ஒரே வேலைதான், அதென்னவெனில் 2பொட்டுகூடையிருக்கும் ஒன்றில் முழுவதும் இளந்தை கொட்டையிருக்கும் அதை ஒவ்வொன்றாக எடுத்து, ராம ராம ராம என மற்றொரு கூடைக்கு மாற்றுவார். இதை காலை 5மணிக்கு ஆரம்பித்தால் இரவு வரை நடககும். மீண்டும் கதவு தட்டபட சேஷிபாட்டி ஜபத்தின் நடுவில் எழுந்து கதவை திறந்தால், என்ன சொல்வேன்!ஸுதிணம்!

ஸ்ரீஐயன் நிற்கிறார்.

வரணும் மஹாப்ரபோ வரணும்! என வரவேற்தார்.

ஸ்ரீஐயன் அதற்குள் கூடத்திறகு சென்று ஊஞ்சலில் அமர்ந்தார். பாட்டிக்கோ கையும் ஒடலை,காலும் ஒடலை.பரம பாக்யம் பெரிவா நம்மாத்துக்கு வர எத்தன ஜன்மம் புண்யம் பண்ணித்தோ இந்த குடும்பமென சொல்லி வந்தனம் செய்ய, பாட்டியின் பிள்ளை ஒடி வந்து தன் காயத்ரிஜபத்தை ஸ்ரீபாதத்தில் சமர்ப்பித்தார்.ராம ராம பாட்டியோ பொட்டுகூடையொடு வந்து, ஸர்வேச்வரா! என்னப்பா! எனவந்தனம் செய்தார்.

ஐயனோ அந்த இளந்தைக்கொட்டையை கையால் அளைந்துகொண்டே, என்ன பாட்டி! ஊர்ல இளந்தகொட்ட பாக்கிருக்கா? என்றார்.

யாருக்கும் அக்ஷரம்கூட வாயில்வரவில்லை. தேடி வந்த தெய்வத்தின் கருணைமழையில் நனைந்துக்கொண்டிருநதனர். கொஞ்சநேரம் அளாவி விட்டு சென்று விட்டார். பாட்டியின் குடும்பம் ஹரஹர சங்கர ஜயஜய சங்கரென சொல்லிக்கொண்டு வழியனுப்ப வாசல்வரை சென்றது. கருணாமூர்த்தி கண்பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்துவிட்டு பின் உள்ளே வந்தனர். சேஷிபாட்டியோ ஊஞ்சலை தடவிக்கொண்டும், ப்ரதிக்ஷிணம் செய்து நமஸ்கரித்துமிருந்தார்.

அடடா! குரூ பெரிவா பாதுக இங்க தங்கிப்போச்சுடா! சீக்ரம் எடுத்துண்டு ஓடு!என்றார்.

பாட்டியின் பிள்ளேயோ அதை சிரசில் ஏந்திக்கொண்டு ஓடினார். பாட்டியும் பின்னால் ஓடினார் மடத்துக்கு. ஸ்ரீஐயனோ அனுஷ்டானம் செய்ய போய்விட்டிருந்தார். இவரோ கண்ணீர்மலகி பரதாழ்வான்போல் திருவடி சுமந்துநிற்கிறார்.

என்ன குருராஜ்! (இப்படித்தான் பாட்டி பிள்ளையை விளிப்பார்) எங்க வந்த!

பாதுக ஆத்துல தங்கிப்போச்சு அத கொடுக்கனும்னு வந்தேன்.

ஓஹோ! உங்கம்மா எந்த ஆதாரத்துல காலக்ஷேபம் பன்றதுன்னு கேட்டா! இத வெச்சுக்கட்டுமேன்னு விட்டுட்டு வந்தேன்.

பாட்டி கண்ணீரால் கரைந்து போனார்.

சரி,நீ சொல்லு என்னமாதிரி ஸந்யாசியெல்லாம் யார ஆச்ரயிச்சிருக்கோம் தெரியுமா? க்ரஹஸ்தாஸ்ரமத்துல இருக்கறவாளத்தான். அதனால காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணிண்டு என்னமாரி இருக்கறவாளுக்கு ஆதரவு கொடு சரியா? என்றார்.

பாட்டியும்,பிள்ளையும் யார்க்கு யார் ஆதாரம் ப்ரபோ!கல்யாணம் செயது கொள்ள இப்படி ஒர் லீலையா என உருகி நின்றனர்.பின் பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆத்திற்கு சென்று பாதுகாபட்டாபிஷேகம் செய்தனர்.இப்பவும் பாட்டியின் வம்சத்திற்கு அப்பாதுகைதான் ஆதாரம்.

அதுசரி சேஷிப்பாட்டியின் 2ம் குமாரர்,குருராஜ் யாரென்று பாரப்போமா? எனது மாமனார் ப்ரும்ஹஸ்ரீ K.N.குருமூர்த்தி ஐயர் அவர்கள்.ஸ்ரீஐயன் ஆக்ஞைபடி திருமணம் செயதுகொண்டு.அதே விவாஹ அக்நியில் 65 வருடங்கள் நித்ய ஔபாசனம் செய்துகொண்டிருந்து,8.2.2006ல் பீஷ்ம ஏகாதசியன்று காலை அனைத்து அனுஷ்டானங்களையும் முடித்து ஸ்ரீராமபாத தீர்த்தம் எடுத்துக்கொண்டு அனாயசமாக பெரியவாளை நினைவுகூர்ந்து(kmuவில் பிக்ஷாவந்தன டிரஸ்ட் தலைவராயிருந்தார்.இதை ஸ்மரித்துக்கொண்டே)குருவடி அடைந்தார்.அவருடைய விவாஹ அக்நியை 65வருடங்களாகரக்ஷித்துவந்தார்.அதை கொண்டேஅக்நிப்ரதானம் செய்யப்பட்டதென்பது குறிபிடதக்கது.அவருக்கு1பிள்ளை.ஐயன் ஆக்ஞைபடி பிள்ளையை வேதாத்யயணம் செய்யவைத்தார்.அவர்தான் என் கணவர்.

*****

Narrated so exquisitely by Smt Prema Madhuri Jayasree about her family, in Sage of Kanchi group in Facebook. Thanks a ton to her.Categories: Devotee Experiences

9 replies

 1. Anantharaman viswanathan,Adambakkam
  Dear Mahesh, when I am facing difficulties I used to read the posts sent by you on Mahaperiyava and contended he will take care.Within short span what we think as a problem becomes zero.Your great work will always have Periyava;s Anugraham.

 2. i am melted on reading this! my gurunathas sathgurusriseshadriswamigal and maha periyava are same .seshu patti story confirm this! sathguru saranam!

 3. so far i have heard bhakthas used to do thapas for getting Mahaperiyava’s paadhugai. Here Karunamurthi has gone to seshi paati’s home and deliberately left HIS paadhugai there for their benefit! Mercy personified. no other words to describe.

 4. No words to express. In fact it is because of you, we have an opportunity to read such
  messages. Thank you very much Sir for this nerve pulling inputs which would one make
  and become an eye opener.

  Balasubramanian NR

 5. Outstanding Bhakthi which captured Maha PeriyavaL who took responsibility for the family. Great Punyam for us to be able to read about this and attempt to improve ourselves.

 6. So beautiful is it not. What compassion.

 7. I don’t know what to say! Too overwhelmed that words fail me! நம்பினார் கெடமாட்டார், நான்கு மறைத் தீர்ப்பு! Faith and Total Surrender at Mahaperiava’s LOTUS FEET.

 8. no other words. only jaya jaya sankara hara hara sankara kanchi sankara kamakoti sankara..

 9. Mahesh : Sairam. God Bless you. I am delighted indeed at the continuous flow of posts you have been gathering, getting and presenting to the devotees. The title of this column “What do you think?” make me think that as an ardent devotee of Mahaperiyavaal, your yeomen servcie of this kind is becoming an authenticated Reference Manual on His Holiness Sage of Kanchi. Thank you very much. You and your clan are beneficiaries of Maha Periyavaal’s paripoorna kadaksham and anugraham.

Leave a Reply

%d bloggers like this: