“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!”

 

Photo courtesy http://www.periva.org

 

(ஸ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்-இன், ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயன் எழுதிய “பக்த சாம்ராஜ்யம்” புத்தகத்திலிருந்து)

கோஸ்வாமி துளசிதாசர் தசரதரை பற்றி ஒரு ரசமான செய்தி கூறுகிறார். தசரதருடைய முற்பிறவியில் அவர் ச்வாயம்புவமனு. அவர்முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில் அவருக்கு தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார்.

அப்பொழுது ச்வாயம்புவமனு ஒரு வரன் கேட்டார் : – “சுவாமி! என்னை யாராவது பைத்தியக்காரன் என்று சொன்னால் சொல்லட்டும். ஆனாலும் தாங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளையிடம் எவ்வித அன்பு இருக்க வேண்டுமோ, அது மட்டும் இருக்கட்டும்.” “அப்படியே” என்று நாராயணனும் அருள் புரிந்தார். ராமனைப் புத்திரனாகப் பெற்ற தசரதர் அவரிடம் எவ்வளவு பிள்ளை பாசம் கொண்டார். பிள்ளையின் பிரிவு தாங்காமல் எப்படி பிராணனை விட்டார் என்பது தெரிந்த விஷயம்.

காஞ்சி காமகோடி பீடம் பரமாசார்யாளிடம் பரம பக்தியும் பிள்ளை பாசமும் ஒருங்கே பெற்ற பெருமை எசையனூர்ப் பாட்டிக்கு உண்டு. எசையனூர்ப் பாட்டி என்ற கோகிலாம்பாள் அம்மாள் தென்னாற்காடு மாவட்டத்தில் எசையனூர் என்ற கிராமத்தில் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, இளமையில் கணவரையும் குழந்தைகளையும் இழந்தவள். ஞான பக்தி வைராக்யங்கள் அவளிடம் அடங்கின. பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள்.

“பரமாச்சார்யாள் ஞானி, தெய்வ புருஷர்” என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும், பாசமும், பரிவும் மறுபுறம். “ஏண்டா, ராமமூர்த்தி! பெரியவா இன்னிக்கிச் சரியாக பிட்சை பண்ணினாளோடா? ஏன் தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் சேர்ந்தாப்போல வரதோ? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் பட்டினியா? இப்படிக் காய்ஞ்சா அந்த உடம்பு என்னத்துக்குடா ஆகும்?”

“மேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோளேன். நீங்க சொன்னாத்தான் பெரியவா கேட்பா! இப்படி ஒரே திரியாகக் கபம் கட்டிண்டிருக்கே! இருமக்கூட முடியாமல் தவிக்கிறாரே! வென்னீர் போட்டுக் கொடுத்து ஸ்நானம் பண்ணச் சொல்லுங்களேன்.”

“ஏண்டா, விஸ்வநாதா! பெரியவா கொஞ்ச நேரம் தூங்கட்டுமேடா! எதற்க்கடா பேச்சுக் கொடுத்திண்டிருக்கேள்?” “இல்லே பாட்டி! பெரியவா பேசறா. நாங்க கேட்டிண்டிருக்கோம்.”

“ஏண்டாப்பா! நெய்வேத்யக் கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே? பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை செய்து பிட்சை பண்ணட்டுமே?”

சவாரிகாரர்களிடம் போவாள். “நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். நன்னா இருங்கோ! இந்தாங்கோ! கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ! (டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது. பெரியவா எப்ப கிளம்பராளோ? தயாரா இருக்கணும். வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ! இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியிலே படுத்துக்கிறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. தீ வெட்டியை எடுத்துண்டு சுத்திவரப் பாருங்கோ. பாம்பு, பல்லி இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு.” என்பாள்.

புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு, ஒரு அலாதித் தெம்பு. அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி, தான் படும் கவலையெல்லாம் மனம் விட்டு கொட்டுவாள். அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள்.

பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி, சொல்லுவாள்:
“நான் சொல்றதை நன்னா கேட்டுக்கோ! பெரியவா அப்படியே தண்டத்தை தோளோடு அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா. திடீர்னு சந்திரக்கலை தெரியறது. கங்கை தெரியறாள். ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி. சாந்தமாச் சிரிச்ச முகம். அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன். எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.”

பழைய மேனேஜர் விஸ்வநாத அய்யர் சொல்வார், “பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப் பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்” என்று! “நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என் கிட்ட சொல்லுங்கோ!” என்று பாட்டியைப் பணிவுடன் கேட்ப்பார்.

மடத்து சிப்பந்திகள் அனைவரிடமும் பாட்டிக்கு பிள்ளை பாசம். அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள். ஊறுகாய், பட்சணம் என்று பணத்தால் ஆக முடியாத பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள்.

“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!” என்று பரமாசார்யாளே தமக்கு சிசுருக்ஷை செய்பவர்களைச் சிரித்துக் கொண்டே எச்ச்சரிப்பார்களாம்.

பரமாச்சார்யாள் மயிலை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் இட்டிருந்தார்கள். அப்பொழுது “எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி விட்டது. காலமானாள்.” என்ற செய்தி. மூன்று நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்கள்.

******

Thanks a ton Smt Devi Umashankar who had posted this in Sage of Kanchi Facebook group.



Categories: Devotee Experiences

Tags: ,

6 replies

  1. Sri Maha periava saranam
    Anything we read on Sri Maha Periava , is an inspiration to all of us.
    He is in fact with all of us , in one form or other
    Let us get a chance to read more and more of these kind of Anubhavam from sri Maha Periava devotees
    Hara hara sankara jaya jaya sankara
    sk ramanathan

  2. How many ever times Periyava posts are repeated, reposted makes no difference. Every time you read, you gain a new experience. Pudhu Anubhavam. More excitement, Eternal Bliss………..Periyava Sharanam.

  3. punniya aathma. how she is describing Mahaperiyavaa as lord shiva as she sees HIM before. what an opportunity she got to be with Mahaperiyavaa till her end! thanks.

  4. I just now posted the following on the Periyavaa Facebook group: My father Kamakoti Chandrasekaran happens to be the sweekara son of the Esayanur patti Kamakoti Kokilambal (her photo is at http://bit.ly/KokilP). I had previously seen a variation of this article in the publication Dinamalar – see http://bit.ly/KokPat for that article. My patti’s photo with the mahaaperiava, my parents and others is also on display at the Kanchi Mahaswami Darshan Hall in Kanchipuram – see my album http://bit.ly/Kanch1 for a large number of photos of that memorial hall. One mistake in both stories is that our village’s location is given wrongly. It is in North Arcot district, near Arcot and Kalavai – see photos of Esayanur at http://bit.ly/Esayan Unfortunately, my patti died when I was around 5 years of age.

    C. Mohan

  5. Reblogged this on Ramani's blog and commented:
    There are ways of Worshipping.God,this as a Child.

  6. Very sorry, half of what is here was already posted by Shri Mahesh in Dec 2011, the others make very good reading.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading