இந்நூலை படிப்பவர்கள் சுவாமிஜிக்கு நினைவு அஞ்சலியாக ஒரு காரியம் செய்தால் உண்மையாகவே என் எழுத்துக்கு கொஞ்சம் சக்தி உண்டு என்று நினைப்பேன். ‘வேத ரக்ஷணம்’ தான் அந்த காரியம். சுவாமிஜி வேதத்தை ரக்ஷிப்பதையே இறுதி மூச்சி வரை முக்கியமாக கருதினார். ஆம், அவர் உடலை உகுத்த தினம் கூட வேதத்தை ரக்ஷிப்பது பற்றியே சுவாமி ப்ரேமானந்தருடன் பேசிக்கொண்டு இருந்தார். பள்ளிகள், வைத்திய பணி இவற்றின் அவசியம் அவர் காலத்தில் இன்றைவிட அதிகமாகவே இருந்ததாலேயே அவர் இந்த இனங்களில் கவனம் செலுத்தினார் என்றும், சமூக பணிகளையெல்லாம் அரசாங்கமே மேற்கொண்டு விட்ட இன்று மட்டும் அவர் ஜீவியவந்தராக இருந்தால் வேத பாடசாலைகளின் நிர்மாணத்துக்கு ஆகவே முழு மூச்சுடன் உழைப்பார் என்றும் நினைக்கிறேன். ஒன்றேயான குரு ஸ்வரூபத்தின் இன்றை தோற்றமாக திகழும் ஸ்ரீ காமகோடி ஜகத்குரு அவர்களும் வேத ரக்ஷணத்துக்கு ஆகத்தான் அரும்பாடு படுகிறார். வெளி ஆசாரங்கள் வேறுபடினும் ஞானியர் யாவரின் உள்ளமும் ஒன்றே என்பதற்கு இது சான்று. இந்நூலை படிப்பவர்கள், வேதநெறி அதற்குரிய முறைப்படி கிரமமாக தழைத்தோங்க தங்களால் இயன்ற உதவி புரிந்தால் அதுவே நூற்பயன் எனக்கொள்வேன்.
….
மௌன நாயகனின் இவ்வரலாற்றை அந்த மணி நாத நாயகிக்கே சமர்ப்பிக்கிறேன். அவளது அருளின் உருவாயும், நான் செய்யும் பிழைகளை எல்லாம் க்ஷமிக்கும் மூர்த்தியாயும் என்னால் ஏதேனும் நல்லது செய்ய முடியுமாயின் அதற்கு காரணமாயும் விளங்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகளின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
– அண்ணா ஸ்ரீ. ரா.கணபதி அவர்கள். ‘அறிவுக்கனலே, அருட்புனலே’ முன்னுரையில்
****
Thanks a ton to Shri Karthi Nagaratnam for posting this in Sage of Kanchi group in Facebook.
Categories: Deivathin Kural
Dear Sirs,
Namaskarams
I am also interested in the kaikaryem towards Veda Padasalai.
I dont know to whom should I donate.
since there are no.of Padasalas nowadays.
Could you guide me in this aspect.
Ram Ram
Seetharaman
RA Ganapathy’s words are an outpouring of his Bhakthi towards periaval-immensely blessed we are for having lived during periaval’stime.