“ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா சொல்லியிருக்கார்”

 

 

Interactions of Writer ‘Sujatha’ with Him

=============================

சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க, பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர். பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’. அவர் போன கார்களின் புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள். பரமாச்சாரியாள் அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன். இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார்.

ஈஸிசேரில் சாய்ந்திருக்க காதருகில் இரைந்து இன்னார் வந்திருக்கா என்று வந்தவர்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி, எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார். அத்தனை ஞானம் கண்டு, அத்தனை தூரம் நடந்து, அத்தனை போதித்து, அத்தனை எழுதி, அத்தனை தலைவர்களும், நீதிபதிகளும், ராஜாக்களும், ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில், இப்போது என்ன எண்ணங்கள் ஓடும் என்று வியப்படைகிறேன். பட்டாபிராமன் என்னைப் பற்றிச் சொல்லி “இவர் சுஜாதான்னு கதை எழுதறவர். குவளகுடி சிங்கமையங்கார்னு சீரங்கத்துல வேத பாடசாலை ஸ்தாபிச்சவர். அவருடைய பேரன்….” இதெல்லாம் காதில் சொனனபோது சலனமே இல்லை.

“ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ண ஒத்தாசை செய்யறதா சொல்லியிருக்கார்” என்று கேட்ட மாத்திரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வாழ்த்தினார்.

*****

Thanks a ton to Shri Bhaskaran Shivaraman who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. I opened Sage of Kanchi blog site and it is nicely coming in Tamil. In Yahoo Mail it is not decipherable at all as it seems to be in code. This is a problem repeatedly seen in Yahoo Mail inbox. Please see if any rectification is possible.

    Writer Sujatha who himself had coronary bypass surgery, did a great thing in helping a poor woman get the benefit of heart surgery. While his general writing did not interest Maha Periyava, He immediately blesses his kind act. Great experience!

  2. Unable to decipher pl. Is this an unknown language?

    ________________________________

Leave a Reply

%d bloggers like this: