“அவர்தான் முக்காலமும் உணர்ந்த மஹானாயிற்றே, இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?”

 

ஒருமுறை திருப்பதி சென்றுவிட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன் மடத்துக்கு சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை. ஸ்வாமிகள் திருப்பதியில் பெருமாளுக்கு அபிஷேகம் எப்படி நடைபெற்றது
என்று விசாரித்து விட்டு என்னுடைய வங்கி எப்படி இருக்கிறது என்றும் விசாரித்தார்.அது முடிந்ததும் விடை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ஓரமாக நின்றோம்.மணிபகல் இரண்டாகி விட்டது.
ஸ்வாமிகள் அநத கணக்கர் இரண்டுபேரையும் போய் மடத்தில் சாப்பிடச் சொல்லு என்று மடத்து சிப்பந்தி ச்ரீ கணடன் மூலமாக ஆணையிட்டார். நாங்களும் போய் உணவருந்திவிட்டு மறுபடியும் வந்து நின்றோம். எங்களைப் பார்த்ததும் ஸ்வாமிகள், “இப்படியே இருங்கள், உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது”, என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
எங்களைப் போன்ற சாமனியர்களால் ஸ்வாமிகளுக்கு வேலை செய்ய முடியுமா? அப்போது மடத்து சிப்பந்தி வந்து ஸ்வாமிகளிடம் ச்ரீ ரங்கம் ஜீயர் ஸ்வாமிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அந்தச் சமயம் ச்ரீ ரஙகம் ரங்கநாத ஸ்வாமியின் ராஜகோபுரப் பணி நடந்து கொண்டு இருந்தது. ஸ்வாமிகளும் அதை உரக்கப் படிக்கும்படி அவரிடம் சொன்னார்.
அதில் கோபுரப் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவு பாக்கி
இருக்கிறது என்றும் எழுதி இருந்தார். அப்போது ஸ்வாமிகள் அவரிடம் கொஞ்சம் நிறுத்து என்று கூறி விட்டு என்னைப் பார்த்து, “உன்னுடைய வேலை வரப்போகிறது”, என்றார். நான்
ஒன்றும் புரியாமல் விழித்தேன். அடுத்த வரிகளில் அந்தக்கடிதத்தில் ச்ரீ. ஜீயர் ஸ்வாமிகள் கோபுரம் கட்டுவதற்கு நன் கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் நிதி துறைக்கு அனுப்பபட்ட
விண்ணப்பம் இன்னும் பரிந்துரை செய்யப்பட்டு ஆர்டர் வந்து சேரவில்லை.ஆதலால் ஸ்வாமிகளின் உதவியை இந்த விஷயத்தில் கோரி இருந்தார்.
உடனே ஸ்வாமிகள் என்னைப் பார்த்து, “நீதானே வங்கியின் வருமானவ்ரி கணக்கு வழக்குகளை கவனித்துகொண்டு இருக்கிறாய். உனக்குத்தான் டெல்லியில் மத்திய வருமானவரித்துறையின் குழுவின் தலைமையாளரை நன்றாகத்தெரியுமே. அவரிடம்
சொல்லி சீக்கிரம் பர்மிஷன் வாங்கிக்கொடு.நல்ல காரியத்தில் பங்குகொண்ட பலனும் வரும்”, என்றார்.
அவருடைய பெரிய நிலைக்கு கண்ணசைத்தால் நிதிமந்திரியே இதை செய்து முடித்திருந்திருப்பார் . இருந்தாலும் என்னைப்போல எளியவனிடம் இந்தப் பணியைக்
கொடுத்தது எனக்கு அவர் செய்த அருள். அவர் சொன்னபடியேஅப்போது CBDT சேர்மனாக இருந்த டாக்டர். சிவ ஸ்வாமியிடம் அணுகி ஸ்வாமிகளின் விருப்பத்தைச் சொன்னதும்
உடனே விலக்கு அளிக்கும் ஆர்டரை மத்திய கெஜட்டில் பதிவு செய்துவிட்டார்.

இதில் எனக்கு புரியாதது கடிதம் வருவதற்கு முன்பே எப்படி எனக்கு வேலை வரப்போகிறது என்றும், கடிதத்தின் பாதியில் படிக்காமலேயே நிறுத்தி எனக்குரிய பகுதி வரபோகிறது என்று எப்படிச் சொன்னார்.

அவர்தான் முக்காலமும் உணர்ந்த மஹானாயிற்றே, இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?

*****
Thanks a ton to Shri T Ramaswamy Chandrasekaran for posting it in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

5 replies

 1. Sree Mahaperiyava’s contribution to the society is enornomus. This incident shows that he had third eye (Gyana kaan). We should be lucky enough to be born during his life time.
  V.Ravichandran ,Alwarpet,Chennai -600 018

 2. anantharamanviswanathan,adambakkam
  Sree Maha Periyava knows everything.By ordering others to do certain things means he is reducing the karma effect
  of others and getting the divine blessings.Whatever Periyava did there will be inner meaning behind that.Surrender to him will make us to accomplish the righteous things we need.

 3. Great experience. Maha SWamugaL’s contribution to Sri Rangam Raja Gopuram construction is enormous. The Jeer who is a Mahan Himself should have felt extremely happy!

 4. i am in search of a Mahan like him. I do not think we have one in India.,He still bless his Devotees in Sukshama Rupa.

 5. so many things like that. are we going to get another chance!!!!HE only should help. n.ramaswami

Leave a Reply

%d bloggers like this: