அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி.
இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு. காஞ்சி பெரியவர்கள், அவர்களில் முக்கியமானவர்கள். காஞ்சி பெரியவர்கள் செய்வதை ‘ஹட யோகம்’ என்றே கூறலாம்.
அவர் ஆணியை விழுங்குவதில்லை. சமாதியில் முப்பது நாள் இருந்து மீண்டும் வருவதில்லை. ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு தெய்வீக நிலையை எட்டியவர்.
ராமானுஜர் காலத்தில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் பற்றிய சர்ச்சை இருந்தது. இன்று இரண்டு மார்க்கத்துக்குமே பாலமாக விளங்குபவர் காஞ்சி பெரியவர்.
எல்லா யோகிகளிடமும் மேதை தன்மையை எதிர்ப்பார்க்க முடியாது. காஞ்சி பெரியவர்களிடம் அதுவும் இருக்கிறது. உண்மையான மேதைக்கு வேண்டிய அடக்கமும் இருக்கிறது. பற்றற்ற ஞானமும், பரமார்த்திக நிலையும் இருக்கின்றன. ‘எல்லோராலும் முடியாது’ என்று சொல்லக்கூடிய வாழ்க்கை நிலை இருக்கிறது. லௌகீக வாழ்க்கையை முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் தெளிந்த உணர்விருக்கிறது.
கடலிலேயே கருங்கடல், அரபிக்கடல் என்றிருப்பதை போல, இந்த கடலும் ஞான கடல், பக்தி கடல், யோகக்கடல். கைப்பிடி அவலிலும், ஆழாக்கு பாலிலும் ஒரு ஜீவன் காதகாதங்கள் நடந்தே போக முடிகிறது என்றால், அது அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி.
– கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதத்தில்…
***
Thanks a ton to Shri Karthi Nagaratnam for posting this in Sage of Kanchi group in Facebook.
Categories: Devotee Experiences
I am not receiving this details in English or in Tamil pl do needful B.Visvamber Rao Baroda Gujarat India
________________________________
the book arthamulla hindu matham is written by kannadasan after the karunakataksham of periava and immediately after his turning the leaf. that is the most wonderful book in simple understandable language. n.ramaswami
Kannadasan has written a book titled “Shankara Pokkisham”, describing MahaPeriyavaa divinely. May be available in Kannadasan Padipakkam.
Kannadaasan has described Maha pEriyavaL with great clarity. Thanks for posting.
do you know that kannadasan was a nasthika who turned a bhakthikadal after the karuna kataksham of periava. n.ramaswami