அவனண்டே உடனே கொடு

Thanks to well-bred Sri Kannan of FB…

தன்னிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்களுக்கு மகான் தேவையான் போது ஆசிகளையும் பிரசாதங்களையும் வழங்குவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சி திருச்சி சுந்தறேசனைபற்றியது அவருக்கு மகானிடம் இருந்த ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமே தமக்கு மகான் தான் என்று மனதார நம்பிய பக்தர்களில் அவரும் ஒருவர் சுந்தரேசன் தனது ரயில்வே பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் சென்னை நங்கநல்லூரில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார் அப்போது அவருக்கு உடல்நிலை முற்றிலும் கெட்டுவிட படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சி மகானைப் பார்க்கப் போகவில்லையே என்கிற கவலை அவரை ஒரு பக்கம் வாட்டி எடுத்தது.

அந்தசமயம் மகன் பிறந்த அனுஷா நட்சத்திரத்திற்கு மறுநாள் பெரியவா கிரக ராஜகோபாலனும், பிரதோஷ மாமாவின் நெருங்கிய சீடரான ஆடிட்டர் ரவியின் தந்தையும் அனுஷ பூஜை பிரசாதங்களை எடுத்துக்கொண்டு மகானைப் பார்க்கப் போயிருந்தார்கள், மகானிடம் பிரசாதத்தை சமர்ப்பித்த பிறகு, அங்கே வரும் பக்தர்களுக்கு வழி விட்டு ராஜகோபால் ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அந்த சமயத்தில் மகான் அவரை அழைத்து “இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு” என்பது போன்ற நினைவு அவர் மனதில் ஓடியது.

திடீரென்று விழித்துப் பார்த்த அவர், தன் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு வியந்தார் . தனக்கு மகான் இட்ட உத்தரவு பிரமையா, மகான் இட்ட கட்டளையா என்று தடுமாறிக் கொண்டு இருந்தபோது மகான் அழைப்பதாக மடத்து ஊழியர் ராஜகோபாலை அழைத்தார்.

மகான் முன் பவ்யமாக அவர் நின்றபோது, மகான் அவரிடம் பிரசாதத்தை கொடுத்து, ” இதைக் கொண்டு போய் அவனண்டே உடனே கொடு” என்று மட்டும் சொன்னார். பொறிதட்டியது போல் ராஜகொபலுக்கு உடனே அந்த சுந்து யார்” என்று புரிந்துவிட்டது வேறு யார்? அவருடைய பெரியப்பாவும் மகானின் தீவிர பக்தருமான் சுந்தரேசந்தான்.

அவன் யார்? என்று சொல்லாமல், பிரசாதத்தைக் கொண்டு போய் கொடு என்றால் தியானத்தில் இருந்தபோது மகான் சொன்னதும் உண்மையான கட்டளைதான்.

தன் மனதில் தோன்றியதற்கும் இப்போது மகான் கட்டளை இடுவதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றியது

ராஜகோபாலும் “யாரண்டை” என்ற கேள்வியை எழுப்பிக் கொன்று நிற்கவில்லை

பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய், நங்கநல்லூரில் இருந்த தன் பெரியப்பாவிடம் சமர்ப்பித்தார் ராஜகோபால்

“நான் பார்க்கவரலேன்னு நீயே எனக்கு பிரசாதத்தை அனுப்பினியா மகானே? என்று கண்களில் நீர் வழியா கேட்டபின் அந்த முடியாத நிலையிலும் பிரசாதத்தை உட்கொண்டார், உடல் நிலை மோசமாகத்தான் இருந்தது .

இருந்தாலும் மகானின் பிரசாதத்தை உட்கொண்ட பிறகு மேலும் சில தினங்கள் அவர் உயிரோடு இருந்து பிறகு இறைவனடி சேர்ந்தார்.

மகான் தன் பக்தர்களை எப்படியெல்லாம் ஆட்கொண்டார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.Categories: Devotee Experiences

5 replies

 1. No words to express our gratitude.Every day we live in thoughts of periyava who is incarnation of Parameswara

 2. Periava saranam Periava saranam Periava saranam Periava saranam Periava saranam
  Dear Mahesh,
  I am really BLESSED to get ur wordpress.From a forward sent by our collegue i got by HIS grace.”Avan Thalelee Avan DHAZH Vanangu”.All articles are very good as well as interviews.The most out standing was IAS swaminathan’s.He was simply pouring like falls without any hesitation–all by HIS grace.
  There is no suitable word to praise u Mahesh and Periva will be BLESSINGS u always to carry on this noble task.I have already registered my mail and i am getting all ur mails.About 20 days back only Periava has included me also as a humble member of ur vast group.
  I am living with our children in USA from 2003 and fortunate to have dharsan Of JEEVA Athistanam in Kanchi during 2008,2010 and 2012 [ june.]
  Can we forward any other articles sent by our friends on Periva and if so to which ID?
  Good Luck and All The Best. anbuden Prameswaran narayanaiyer, Maryland-USA.

 3. Deergadarsi is probably not the proper word for foretelling. For most of us he just indicates what would happen and what should we do. we know only to cry even when we think of him. the fortune is seeing him and reading him immediately we open the computer and start doing anything or think anything. May he guide us always and bless persons like Mahesh to continue this service unendingly. n.ramaswami

 4. Only “HE” knows every thing. That is PeriyaVa

Leave a Reply

%d bloggers like this: