சீராரும் (வேத) சிறாரும்

Brings tear in my eyes….must-read to know how veda was everything to our Periyava….Since this article has come from Shri Ra.Ganapathi, we can’t suspect the authenticity.. There are so many incidents when Periyava showed his extreme anger when vedic pundits or veda students were disrespected. Here is another popular article (http://mahaperiyavaa.blog/2011/11/28/respect-for-vaideekas-must-read/)

 

அவர் ஆஸ்தானம் கொண்டிருந்த தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் அன்று இளங்காலை ஒரே பரபரப்பு, பதைபதைப்பு என்றே சொல்லலாம்.

உடனிருந்தோர் உறக்கம் கலைந்து பார்க்கும்போது பெரியவாளை காணோம். சிவா ஸ்தான ஆலய சூழலில் முழுதும் தேடி பார்த்தும் காண முடியவில்லை. பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்படாதிருக்குமா?

அடியார்கள் சுற்று புறம், அதை கடந்தும், சல்லடை போட்டு தேடிக்கொண்டே போனார்கள், முடிவாக, அங்கு ஓடிய சிற்றாற்றின் கரையில்…. என்ன கொடூரம்…

முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓரிடத்தில் ஸ்ரீ சரணர் சுருண்டு கிடக்கிறார்.

‘அவராக வந்து இந்த முள்ளுப்படுக்கை உவந்தாரா, அல்லது….?’ எண்ணாததெல்லாம் எண்ணி அடியார் கணம் அருகு நெருங்க, அவர் பளிச்சென்று எழுந்து அமர்கிறார். அந்த மட்டும் வயிற்றில் பால் வார்த்து விட்டார். ஆயினும் திருமேனியில் அப்பியது போல், முள் அங்கி பூண்டுள்ள கோலம் அடியார்களின் நெஞ்சில் கூர்ப்பாக தைக்கிறது.

வயது முதிர்ந்த பக்தர் ஒருவர் ‘ஐயோ, பெரியவா, இதென்ன சோதனை?’ என்று வாய்விட்டு அலறுகிறார்.

பெரியவாள் சொல்கிறார் …

‘இந்த நாள்ல ஜன சமூஹத்தை வசீகரிச்சு பிடிச்சிண்டு இருக்கிறதா, கை நெறைய சம்பாதிக்கறதுக்கு தினுசு தினுசா படிப்புகள் இருக்கு. அப்படி இருக்கறப்ப, என் வார்த்தையை மதிச்சு,(நெகிழ்ந்த குரலில்), என்னை நம்….பிண்டு சில தாயார்-தோப்பனார்மார் தங்கள் கொழந்தேளை வருமானம், ‘ஆனர்’, ‘பேஷன்’ எதையும் கவனிக்காம, (வேத) பாட சாலைகளுக்கு அனுப்பிண்டு இருக்கா. அந்த கொழந்தைகளும் ஊர் ஒலகத்திலே ஒடனொத்த கொழந்தைகள் தினம் ஒரு டிரஸ், வேளைக்கு ஒரு ஹோட்டல் ன்னு இருந்துண்டு இருக்கறப்ப, ஒரு மூணரை மொழ சோமனை சுத்திண்டு, போடற உண்டை கட்டியை தின்னுக்கிண்டு, வெளிலே தலை காட்டினாலே, ‘சிண்டு டோய்’ ன்னு பரிகாசத்தை வாங்கி கட்டிண்டு தொண்டை தண்ணி வத்த ஸந்தை சொல்லிண்டு இருக்குகள்…’

ஏதோ ஓரிடத்தில் ஸ்ரீ மடத்தின் ஆதரவில் நடை பெறும் பாடசாலையை குறிப்பிட்டுவிட்டு தொடர்கிறார். ‘அங்கே கொழந்தைகள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள் – ங்கறதுக்காக சமையல்கார அம்மா புது தொடைப்பத்தால அடிச்சுட்டாளாம், வேதம் படிக்கிற கொழந்தேளுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கறதுக்கு தான்…’

கருணைக்கடலில் சில அலைகள், அண்ணா ஸ்ரீ. ரா.கணபதி அவர்கள்.

Thanks to Shri Karthi Nagarathnam, FB


Categories: Devotee Experiences, Mahesh's Picks

Tags:

6 replies

  1. Truly a good collection .we should all practice at least gayathri mantra daily and perform sandhya vandana every day

    We should at least recite RUDRAM And CHAMAKAM weekly once honour the Vedic pandits and support Vedas

  2. Our PeriyaVas love towards Veda Vidyarthis and Veda pandits are very much.I had an experience in my life”When Vadhyar of our village,Perumbavoor(Kerala–hardly 5 kilometers from the birth place of Adi Sankara Bhagavath Pada) who is our purohithar,was lied down and hospitalised,there ancestors are from Vaitheeswaran koil in tamilnadu,He is very much devoted to Kanchi Paramacharyal.I have written a letter to Srimatam about his ailments and with in a weeks time He passed away.I have informed this also to Srimatam,on the Shubhasweekaram day Our Acharyal”s prasadam reached home,they are all very much happy to receive the prasadam and every one remember Brahmasri Venkatrama Vadhyar devotion to Acharyal. This incident prove our Acharyas unflinched affection towards VedaPandits,Hara Hara Sankara.Jaya Jaya Sankara.

  3. May His compassion protect all Vidyarthis .

  4. K Rajaram IRS
    Brahmagnanis are similar. There is similar one With Sri Ramanar Too. Pranams to them. Really those sanskrit learners then, what are they today? They were blessed, to relieve their pain Sami took on HIM. Hara hara sankara Jaya Jaya sankara

  5. Brought tears on my eyes. This is the heart melting Karunai that MahaPeriyava has been showing to all and in this particular instance to Vedic children.

    Jaya Jaya Shankara, Hara Hara Shankara.

    Regards
    Krishna

  6. Most heart rendering scene.
    Maha Periyaval through His Gnana Dhristi Had realised & inflicted pains on Himself .
    Hara Hara Sankara , Jaya Jaya Sankara..

Leave a Reply to K Rajaram IRSCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading