Courtesy: Well-bred Kannan@FB
சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவானோடு கூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளா விட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடபுடா’. வேலை செய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை.
வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ண வேண்டுமென்றில்லாவிட்டாலும், தடைபடாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும் படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோப வாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.
‘பசி’ எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுக மிருந்தாலும் மௌனம் அநுஷ்டி:,கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக் கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும்.
சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மா விடம் நிற்கும். ‘இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால்,மரண வாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படி பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.
Categories: Upanyasam
Hara Hara Sankara,Jaya Jaya Sankara.
Maha Periyaval Saranam .
மிகவும் அருமையான பதிவு. உபவாஸத்திற்கான உண்மையான அர்த்தமும் அழகாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரிய்வாளுக்கு அடியேனின் அனந்தகோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
[இந்தப்படத்தில் உள்ள அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான பழக்கம் உண்டு.]