நமஸ் ஸோமாய ச

நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், “வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே ” என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, “அயம்மே ஹஸ்தோ பகவான்” என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை, நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது.

ஸ்ரீ ருத்ர மகிமையைக் கூறவந்த சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் அவர்கள் ஒரு நடந்த சம்பவத்தை எழுதியிருக்கிறார்கள். ஒரு சமயம், ஸ்ரீ தீட்சிதரின் பெரிய தகப்பனார் ஸ்ரீ சுவாமிநாத தீட்சிதர் என்ற நித்யாக்நிஹோத்ரிகள், தன் பத்னியுடன் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஸ்நானத்திற்காக ஸ்ரீவாஞ்சியம் என்ற ஸ்தலத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். இருட்டிவிட்டபடியால், வழியில் இருந்த புதர்களில் இருந்து நரிகள் ஊளை இடும் சப்தம் கேட்டது. மார்கபந்துவான ஸ்ரீ பரமேச்வரனைத் தீட்சிதர் த்யானிக்கலானர். அச்சமயம் கையில் விளக்குடன் ஒரு சிவாச்சார்யார் அங்கு வந்து, தானும் ஸ்ரீவாஞ்சியம் செல்வதாகவும் பயப்படாமல் தன்னுடன் சேர்ந்து வரலாம் என்றும் சொல்லி ,ஸ்ரீவாஞ்சியம் கோயில் வந்தவுடன் உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலை தீட்சிதர் கோயிலுக்குச் சென்று அந்த சிவாசார்யாரைப் பார்த்துத் தன் நன்றியைத் தெரிவிக்க முற்படலாயினார். இதைக் கேட்ட அர்ச்சகரோ,முதல் நாள் மாலை, கோவிலை விட்டுத் தான் எங்கும் போகவே இல்லை என்றார். அப்போதுதான் தீட்சிதருக்கு, துணையாக வந்தவர் வாஞ்சினாதேச்வரர் என்று புரிந்தது. ஒப்பற்ற துணையாகத் தன் பக்தர்களைப் பெருமான் இன்றும் என்றும் காத்துக் கொண்டு இருக்கிறான்.

Mahaperiyava also tells how Srimad Bagavatha puranam, in spite of its focus to highlight Lord Vishnu, positions the story of Daksha Yagam exactly in the center, where Devi herself talks about the Shiva mahimna to her father.

Om Nama Shivaya!!!



Categories: Upanyasam

2 replies

  1. Rightly reminded. I remember having read the same in ‘Deivatin Kural’. When Dakshaprajapati insults Shri Shiva in front of His consort Dakshyayini , She replied to Her father suitably about the glories of Shri Shiva. Mahaperiyava said here is the ‘pushitiyaana aadharam’ (sold proof) about the importance ‘Shri Shiva Panchakshari’. She says about the glory and divinity of Panchakshara mantram and unable to bear the insult made to Shri Shiva, through yogic power She gives up her earthly body. As we all know carrying Her body Shri Shiva was roaming and the ‘samhara’ work became standstill. Shri Vishnu cuts the body of Dakshyayani (Sati Devi) into many pieces which fell in and around India. These places have become ‘Shakti peetams’. One of such place is in Guwahati where Her genital part fell on the Nilachal Hills. She is worshipped as Maa Kamakhya here. I am proud of staying in this holy city. Devotees throng here to have Darshan of Maa Kamakhya.

  2. Lord Siva Never let his Devotees Down,His Karunyam is very well known to his devotees.

Leave a Reply

%d bloggers like this: