Om Veenamudhangathi sakala vaadhyanatha swaroopaya namaha

சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. இது பின்னர் மஹா பெரியவா தரிசனங்கள் என்ற பெயரில் வரும் தொடர் வெளியீட்டில் வரலாம். இப்ப ஸ்னீக் ப்ரிவியூ!

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து  நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. ” தப்பு  பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்”  என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தார்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?

ராவணன் சிவ பெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.

எதிரில் நாரதர் வந்தார்.

என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?

நான் சிவ பெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!

அட அசடே! அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!

என்ன சொல்லறீங்க? வேலை செய்யாமலும் இருக்குமான்னா?

எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு. உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?

ஆமா. சரி, இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!

கைலாசத்தை ஒன்பது தலை 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம்.

பார்வதி திடுக்கிட்டுப்போய் சிவனை கட்டிண்டாளாம்! சிவன் சிரிச்சாராம்.

 பார்வதி கோபிச்சுக்கொண்டு, ஓய் உமக்கு ஸ்த்ரீயின் குணம் எப்படி தெரியபோறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரேதன் சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?

(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)

மலை கொஞ்சம அசைஞ்சதும்பெருமான் கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார்.

மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.

ராவணன் செய்வது அறியாமல் திகைச்சு போனான்.

நாரதர் “அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? ” என்றார்.

நாரதரே தப்பிக்க ஏதாவது வழி சொல்லும்.

அட உனக்குத் தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.

நான்தான் மாட்டிக்கொண்டேனே?

பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு.

வீணை இல்லையே?

இதோ நான் தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.

ராவணனும் ஸாம கானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப்படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.

அது சரி, இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???

வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.

இதில் ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

யாருக்குத்தெரியப்போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.

ஜெய ஜெய சங்கர….ஹர ஹர சங்கர



Categories: Devotee Experiences

6 replies

  1. Pride of knowledge is highly subtle but more danger than other prides. Only seers like Maha Periava can overcome easily. But we should a pride that we have lived in the same period Maha Periava was on this earth.

  2. Mahaperiyava showed by action what to be taught, Never be proud of once achievement. All His will.

  3. Here, I want to add an incident that took place about two decades back. We all had been to Sabarimalai under the guidance of Shri Thyagarajan Prakash. As we all know Sri Mahaperiyava Himself was considered to be the avatara of Divinity. Out of our affection we were offering Sabarimalai vibhuti to Him along with other prasadams in a plate. Shri Mahaperiyava touched the vibhuti with His tumb and returned the same to us . We all also know that Shri Sabarimalai Aiyappan is joining his thumb and also the next (index ?) fingers. This posture is called ‘Chinmudra’. Few other Gods who teach Jnana-upadesam are Shri Sringeri Saradamba, Shri Dakshinamurti & Shri Adi-sankaracharya are also showing such Chinmudra. The thumb shows Paramatma and the other finger is showing Jeewatma. When the Paramatma joins with the Jeevatma , it is called ‘Kaivalyam’ or ‘Saayujyam’ or merging with the Divinity. This explanation was given to us by Aangarai Shri Krishnamoorthy Ghanapatigal who taught us the Holy Vedas in Guwahati .

    So, when we gave the holy ashes to Shri Mahaperiyava, He indicated to us that He was the manifestation of that Paramatma by touching it with his thumb . What more to explain ?

  4. Wonderful. Koti Koti Namanskaram.

  5. Maha PeriyavaL is Paramatma Svaroopam. What can escape His attention? “Do not have Vidhyaa Garvam” is His Divine Upadesam to us all.

  6. HARA HARA SHANKARA

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading