ஜகத்குரு

 

உங்களை ஜகத்குரு என்கிறார்களே, நீங்கள் என்ன அகில ஜகத்துக்கும் குருவா என்றூ காசியில் பண்டிட்கள் பரமாச்சாரியார் காசிக்கு விஜயம் செய்தபோது கெள்விகணை விடுத்தார்கள்.அவர்களுக்கு பணிவாக பதில் சொன்னார் ஜகத்குரு – “உலகில் உள்ள எல்லாரையும் எல்லாப்பொருளையும் குருவாக கருதுகிறேன் அவ்வளவுதான்”.

அந்த நிதர்ஸனம் நமக்கு புரிவதற்கு பல ஆண்டுகள் ஆகியது.மேற்கொண்டு படியுங்கள் நீங்களும் உடன்படுவீர்கள் அவர் மட்டும்தான் ஜகத்குரு என்று.

காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.அன்று ‘ஏகாதசி’.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா,”இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்துகொண்டிருக்கிறார்! சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்.”என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் “, இன்று ஏகாதசி, நான் சாப்பிட மாட்டேன்.” என்றார்.

அவர் மராட்டிக்காரர்.மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.ஆச்சர்யப்பட்ட பெரியவா, “சரி,சாப்பிட வேண்டாம்.டீ யாவது குடித்துவிட்டு வரச்சொல்லுங்கள்.” என்றார். அவரோ, “நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.நீங்ககவலைப்பட வேண்டாம்.”என்றார். அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார். அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு!

இப்படி ஏகாதசி தண்ணீர்கூட இல்லாமல் கழிந்தது. மறுநாள் ‘துவாதசி’. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால்கூட நாமெல்லாம் துவாதசியில், ‘பாரணை’ என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம்.

சாஸ்திரப்படி, துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர். அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்துவிட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் ‘பிரதோஷம்’. அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு ‘சிவபூஜை’ பண்ணி, சிவ தரிசனமான பின்தான் உண்பது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் ‘மகாசிவராத்திரி’. அன்றும் உபவாசம். தீர்த்தமாட மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.

அவ்வளவு கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர், ‘வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரவில்லை’ என்கிறார்.Categories: Devotee Experiences, Mahesh's Picks

4 replies

  1. ஜகத்குரு என்ற சொல்லுக்கு பொருந்தாத அல்லது தனக்குப் புரிந்த அர்த்ததில் கூறியதால் தானோ இவர் அனைத்து இன, மொழி, நாடு என்ற பிரிவினை வைத்துக்கொண்டு ஒரே இனம் (பிறாமணர்க்கு) மட்டும் குருவாக செயல்பட்டார்?

  2. நமக்கு இருக்கும் உற்சாகத்தில் சில சமயகளில் நமக்கும் வரும் செய்திகளை நாம் நன்றாக கவனிப்பதில்லை. உதாரணமாக இந்த கட்டுரையில் முதலில் காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.அன்று ‘ஏகாதசி’.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார் என்று குறிப்பிட்டுவிட்டு பின்பு அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார் என்று எழுதுவது முறன் பாடாக இல்லையா? இந்தமாதிரியான தவறுகள், செய்தியில் இருக்கும் மகத்துவத்தையே குறைத்துவிடவில்லையா?

    சுந்தரராஜன்

  3. சங்கரா என் அம்மா!

Leave a Reply to Panchanathan Suresh Cancel reply

%d bloggers like this: