ஞானியின் பகல் நமக்கு இரவு

மாயை என்பது ஞானிக்கு பூஜ்யம்தான்.ஆனால், ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்து பக்கத்தில் இந்த பூஜ்யத்தை சேர்த்துக்கொள்கிறான்.

ஞானியே உள்ளது உள்ளபடி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மை செய்து இருக்கிறது போல் ஒரே பிரம்மம் இத்தனையும் ஆகி இருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால் விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப் போகும். கசப்பு வச்துவாகத் தோன்றும். அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான்.

உலகம் எல்லாம் ஆனந்தமயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான்.நமக்கு கசப்பு அவனுக்கு இனிப்பு – நமக்கு கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்கு பகல் அவனுக்கு இருட்டு என்று கிருஷ்ணா பகவான் சொல்கிறார்.

பிரம்மம் என்றே வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது.இருட்டான மாயை தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது.இதெப்படி முடியும் என்று கேட்கலாம்.

மாயையும் பிரம்மத்தை சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்த குறைந்த ஒளிதான் ணம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது.

சுமாரான வெளிச்சத்தில் தான் புஸ்தகத்தின் கருப்பு எழுத்துகள் தெரியும்.ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புத்தகத்தை பிரித்தால் எழுத்தே தெரியாது.

நமக்கு மாயையின் அற்பப்ரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன.

ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதின் அர்த்தம் இதுவே.



Categories: Upanyasam

1 reply

  1. Our Periyavaas explanations to each and every thing is wonderful and to the point,We are all very much blessed to have his Dharshan and listen to his Upadesham.If we follow his words in toto our life will be a blessed and happy one .
    Our thanks to you for this great work.
    T.S.Muralikrishnan.
    Perumbavoor-683542(Perumbavoor is hardly 6kilometers from Kalady, the birth place of Adisankara bhagavath padal)

Leave a Reply

%d bloggers like this: