குறைவொன்றுமில்லாத கோவிந்தா

 

சீதாதேவி ஜெயிலில் வாசம் பண்ணியது, ஜனகர் அவளை தன் பெண்ணாகவே சொந்தம் கொண்டாடிக்கொண்டு ராமன்ரை யாசகராக்கி தூது போனது, எல்லாவற்றுக்கும் மேலாக வால்மீகி அவரை இந்திரனுக்கு ஒப்பிட்டது என்பதாக ராமாவதாரத்தில் சுவாமிக்கு ஏற்பட்ட ஐந்து குறைகளை க்ரிஷ்ணவதாரத்தில் அவர் நிவ்ருத்தி பண்ணிக்கொண்டார்.

அதிலே வெளிப்பார்வைக்கு குறையே இல்லாத நிறைவு விஷயங்களாகத் தெரியும்படி இரண்டை அவர் நிவ்ருத்தி பண்ணிக் கொண்ட விசேஷம் ‘கோவிந்தா’னாக அவர் ஆனபோதே நடந்தால்தான் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று ஆண்டாள் பாடினாள்.

மூன்று தரம் ஒன்றை சொன்னால் அது பரமசத்யம்; அனந்தம் தடவை சொல்வதற்கு சமம். இன்றைக்கும் கோர்ட்டில் சத்ய ப்ரமாணம் பண்ணுகிறபோது மூன்று தரம் பண்ணுகிறார்கள்.

அதனால்தான் சுவாமி ஐந்து குறைகளை போக்கிகொண்டார் என்றாலும் மூன்று தரம் கோவிந்தா நாமாவை சொல்லி விட்டால் போதுமானது என்று நினைத்து ஆண்டாள் அடுத்தடுத்து மூன்று பாட்டுக்களில் ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றும் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா!’ என்றும் ‘இற்றை பறை கொள்வானன்று காண் கோவிந்தா!’ என்றும் பாடியது.

இதிலே மத்ய மணி ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா!’ என்பது. கோவிந்தனான போதுதான் சுவாமி ரொம்பப் பெரிய குறையைப் போக்கிகொண்டார் என்பதாலும், அப்போதுதான் அவருக்குள்ளே இருந்த குறை தீர்ந்ததோடு வெளியிலேயும் இரண்டு விதத்தில் தமது பெரியவ பிரபாவத்தை காட்டினார் என்பதாலும், மற்ற மூன்று குறைகளை தீர்த்துக்கொண்டதையும் அந்த கோவிந்த நாமாவை போட்டே சொல்லவேண்டும் என்று நினைத்து அப்படிப் பாடினாள். ஆச்சர்யாள் மூன்று தரம் ‘பஜ கோவிந்தம்’ சொன்னர்போலவே மூன்று அடுத்தடுத்த பாட்டுக்களில் அந்த நாமாவை பாடினாள்.

மூன்று பாட்டிலும் குறிப்பாக கோவிந்த நாமவையே சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு விசேஷம் இருக்கத்தானே வேண்டும்? அந்த ஒவ்வொரு பாட்டின் அர்த்தத்தோடும் மையக் கருத்தோடும் அந்த நாமாவுக்கு ஏதோ விசேஷ சம்பந்தம் இருக்கத்தானே வேண்டும்?

‘கோவிந்தன்’ என்றால் குறையில்லாத பூரணன், குறை நிறைந்த நம்மையும் பூரணமாக ஆக்குகிற கருணை வள்ளல் கோவிந்தன்.நமக்கு எல்ல நலனும் தருவான், குறைவொன்றுமில்லாத கோவிந்தன்.Categories: Upanyasam

1 reply

  1. RAM RAM

    naam anaivarum unavu unnum bodhu kooda, andha govinda naamathai ucharipadhu migavum sirappaaga kardha padugiradhu indru varayilum…

Leave a Reply

%d bloggers like this: