சேயோன் – முருகன்

ஸ்காந்த மகாபுராணம் ஒன்றரை லட்சம் ஸ்லோகம் கொண்டது.இதுதான் உலகத்திலேயே பெரிய கிரந்தமாக இருக்கும்.

இந்த புராணம், குமரோத்பத்தியை விவரிக்கின்ற புராணம். ராமாயணம், குமார சம்பவம் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பவை. வடதேசத்திலும் முருகனுக்கு உள்ள பெருமைக்கு இதெல்லாம் அடையாளம். ‘குமார குப்தன்’  என்கிற மாதிரி பல ஆரியவர்த்த ராஜாக்கள் இவர் பெயரை வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

வட புலத்தின் பல ராஜ வம்சங்கள் அவரை “பிராமண்ய குமாரர்” என்று குல தெய்வமாகக் கொண்டிருந்தன. அந்த ராஜாக்கள் தங்களையும் “பிராமண்யர்கள்” என்றே சொல்லிக்க்கொள்வார்கள், சுப்ரமண்யத்தில் முதல் எழுத்தை தள்ளினால் ‘பிராமண்யம் தானே நிற்கிறது?

இங்கே, தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் ரொம்பவும் தொண்டு செய்திருக்கிற காஞ்சி பல்லவ ராஜாக்களும் தங்களை சிவ பக்தியில் சிறந்த பரம மகேஸ்வரர்களாகவும், விஷ்ணு பக்தியில் சிறந்த பரம பாகவதர்களாகவும் சொல்லிக்கொள்வதோடு, ஸ்கந்தோபாசனையை விசேஷமாகச்செய்த பரமப்ப்ராமண்யர்களாகவும் வர்ணித்துக்கொண்டு இருக்கிறார்கள். சாசனங்களில் இவற்றை பார்க்கிறோம்.

போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய சிவ பூஜையில் ஸ்கந்தனுக்கு இடம் கொடுத்து இருக்கிறது. ஆபஸ்தம்ப மகரிஷியும் நித்தியம் கொடுக்க வேண்டிய தேவ பலிகளில் ஸ்கந்தனையும் அவனது பார்ஷதர் – பரிவார கணங்களையும் சேர்த்திருக்கிறார்.

தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதையெல்லாம் சொல்லவேண்டும் – ஏனென்றால் தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். முருகன் என்று அலாதி அன்பு சொட்ட சொல்வது தமிழர்களுக்கே உள்ள பெருமை. ஆதி காலம் தொட்டு இங்கே குறிஞ்சி நிலக்கடவுள் அவரே.

தொன்மையிலும், தொன்மையான ‘தொல்காப்பியம்’ இதை ‘செயோன்மேய மைவரை உலகமும்’ என்கிறது. ஆறு படை வீடுகள் என்ற பிரசித்த க்ஷேத்திரங்கள் இங்கேயே உள்ளன. அவை தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.அகஸ்தியருக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்து இருக்கிறார். மிகப்பழைய ‘திரு முருகாற்றுப்படையில்’ நக்கீரர் இவர் புகழை பாடுகிறார்.அதை பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப்பலன் அடைந்திருக்கிறார்கள்.

காவடி எடுப்பது, கிருத்திகை விரதம், ஷஷ்டி உபவாசம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை. இதனால் முருகனை தமிழ்த்தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறோம்.

வைதீக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட சுவாமி அவர் என்பதற்கு சுப்ரமண்யர் என்ற பெயரே போதும்.வேத நெறியை வளர்க்கிறவர் சுப்ரமண்யர் என்பது வெளிப்படை.Categories: Upanyasam

5 replies

  1. really a noble job why can you not arrange to reproduce acharyal upanyasangal by kalaimagal now out of print photo is rare the selection of relevant chapter can be done only under periyaval guidance

  2. AUM SRI RAMAJAYAM: THERE ARE MILLIONS WHO HAD DARSHAN OF SRI SRI PERIYAVA AND MANY HAVE THRILLING EXPERIENCES AND IT IS TIME THAT THEY SPEAK OUT OR WRITE IN THIS FORUM. MAHAPERIYAVA IS A SAHABTHAM AND EVERY BODY FELT [DESPITE SO MANY SHORTCOMINGS SOME COULD BE LIKE ME ALSO?} THAT HE HAS A SPECIAL PLACE IN MAHAPERIYAVA”S SANNIDHI’. SRI periyava is still helping all of us through his athishtanaam. You have any problem then goto Kanchipuram and do pradakshina of his athishtanam praying silently keeping mounam. He has answered many sincere devotees. You are one among them. Have faith. JAYA JAYA KAMAKISHI SANKARA.

  3. THANK YOU MR.MAHAESH. PLEASE DONT STOP POSTING IN TAMIL WHATEVER IT IS. PLEASE PRESERVE TAMIL AND YOU MAY “ALSO” POST IN ENGLISH. PLEASE PLEASE PLEASE ENCOURAGE TAMIL LANGUAGE. NOT THAT PERIYAVA DOSEN’T KNOW OTHER LANGUAGES, BUT WAS FLUENT IN MORE THAN 18 TO 20 LANGUAGES, IF WE HAVE TO FIT IN A LIMIT. IT IS ONLY BECAUSE OF TAMIL LANGUAGE THAT WE HAVE SO MANY UPANYASAMS, PREACHINGS AND INCIDENTS OF MAHAPERIYAVAA. THANK YOU.

    VENKATARAMAN.S.

  4. We are thankful to Mahesh for his continued service on providing information on Maha periyava. It is sure a great service to the humanity.

Leave a Reply to LAKSHMINARAYANANCancel reply

%d