Anandhaswaroopam – ஆனந்தஸ்வரூபம்

மனுஷ்யன் புறத்தில் ஆனந்தைத்தை தேடிக் கொண்டு காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதுதான்.இவன் உள்ளூர ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போதும் தேடி கொண்டு இருக்கிறான்.

மாயையால், தானே, ஆனந்தஸ்வரூபம் என்பதை மறந்து விட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

மனுஷ்யர்களில் எவராவது ஆனந்தைத்தை தேடாமல் துக்கத்தைத் தேடி போகிறவர் உண்டா?

ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து, சாந்தத்தில் அதை அனுபவிக்காமல், வெளியில் ஆனந்தைத்தை தேடி துரத்திக்கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள்.

தன் நிஜஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்மவிசாரம் தியானம் செய்து பார்த்தால், தானே, பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

இவனுடயதான உள்ள ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரிதான்.

இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தைத் தேடவே மாட்டான்.தன்னை தானே அனுபவித்துக் கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான்.

நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூர்ண வஸ்து. நமக்கு அன்னியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியில் இருக்கிற அத்தனை ஆனந்தமும் நம்முள்ளேயே அடக்கம்.

நமக்கு உள்ளே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பெதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனை சொல்கிறோமே, அவனை த்யானித்துக் கொண்டிருந்தாலே போதும். அந்த ஆனந்த ஸ்வரூபன் நம்முள்ளேயே இருக்கிறானே!

அவனும் ஆமும் ஒன்று என்பதால் அவனே நமக்கு அவனுடைய நிஜ ஸ்வரூபத்தை அனுக்ரஹித்து விடுவான்.

OM POORNAMADAH POORNAMIDAM
POORNAAT POORNAMUDACHYATE
POORNASYA POORNAMAADAAYA
POORNAMEVAAVASHISHYATE

Om Shanthi Shanthi Shanthi



Categories: Upanyasam

6 replies

  1. I agree with Sri Lakshminarayanan. The very picture of Sri Periyavaal is bliss. Is it possible to get a copy of that picture?

    Thank you for your blog Mahesh. It is wonderful.

  2. “சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனை சொல்கிறோமே, அவனை த்யானித்துக் கொண்டிருந்தாலே போதும். அந்த ஆனந்த ஸ்வரூபன் நம்முள்ளேயே இருக்கிறானே!”

    who is that “Oruthan” being referred to here. I believe that Oruthan is Paramathma (MahaPeriyava) himself…

    Yesterday, on VIjay there was a program called “imaya malayai thedi superstar” – in that program, they were referring to Kriya Yoga and that through Kriya Yoga, it is possible to realize the Happines/power within oneself. Even though, there could be many ways of realizing that Happiness/power within oneself, i believe that Bhakthi towards God is the only way of completely realizing it.

    Thanks once again to Sri Mahesh. In his multimedia links, there is an audio link where MahaPeriyava quotes & explains the following Gita so eloquently

    bhaktya mam abhijanati
    yavan yas casmi tattvatah
    tato mam tattvato jnatva
    visate tad-anantaram

    Hara Hara Sankara
    Jaya Jaya Sankara

  3. LOOKING AT THE MERE PICTURE OF MAHAPERIYAVA GENERATES BLISS OR SHANTHI

  4. Oru sottu/thivalai anubavithaal, appuram adhai vidamaattom. Andha sottukku Acharyaal anugraham vendi praarthippom

  5. thats why ‘in sushupti’ one is the happest..merger of athma and myself..’is there a better way to describe our ananda swarupam’asks Sankara..

  6. Thanks for sharing !!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading