Starting today, I am posting a series of articles – primarily Periyava on different topics – very nicely narrated by Dr. K.Ramamurthy….My prayers to Periyava to gives me more motivation and time to post more….
எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது எதுவோ, அதை தியாகம் பண்ணினால்தான் மஹா கணபதிக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்கு தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரன் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயை சிருஷ்டித்து, அந்தக் காயை பிள்ளையாருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும் படியாக ஈஸ்வரன் அனுக்கிரகித்திரிக்கிறார்.
அஹங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிர்த ரசமாக இளநீர் இருப்பதை, இந்தச் சிதறு தேங்காய் உணர்த்துகிறது. சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்திற்கு மட்டுமே உரியது.
இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவிததனால் அவரை நாம் பிள்ளையார் என்றே விசேழித்து அழைக்கிறோம்.அவரை முதற்கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணாபத்யம் என்று பெயர்.
பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கர்ணம் போடுகிறோம் அல்லவா, “தோர்பி: கர்ணம்” என்பதே தோப்பு கர்ணம் என்று மாறியது. தோர்பி என்றல் கைகளினால் என்று அர்த்தம். கர்ணம் என்றல் காது. தோர்பி: கர்ணம் என்றல் கைகளால் காதைப் பிடித்து கொள்வது.
“வாகீசாத்யாஸ் ….கஜாநம்” என்ற ஸ்லோகத்தில் பிரம்மாதி தேவர்களும் கூட எந்தக் காரியத்தில் ஆரம்பித்திலும் எவரை நமஸ்கரித்தே எடுத்த கார்யத்தை முடிதவர்களார்கிறார்களோ, அந்த கஜானனரை- யானை முகனை – நானும் நமஸ்காரம் பண்ணுகிறேன் என்று சொல்லி இருக்கிறது.
தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார். வேதகால ப்ரஹ்மநஸ்பதிதான் புராணகால விக்னேஸ்வரர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். பிள்ளையாருக்கு சுக்லாம்பரதரம் குட்டிக்கொள்ளாமல் எதுவும் தொடங்குவதில்லை.
பூதேசனாகிய பரமேச்வரனார் தன்னுடைய பூதப்படைகளை இரண்டாகப்பிரித்து ஒரு கணத்தின் அதிபதியாக கணபதியை வைத்தார். பூத கணபதி ஸேவிதம் என்று அவரை நாம் ஸ்தோத்ரிக்கிறோம் ….
ஒரு சுவடி எழுதத் தொடங்கும்போது அது எந்த விஷயம் பற்றி சுவடியாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் ஸ்ரீ கணாதிபதயே நம: என்று போடும் வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பிள்ளையார் சுழி போட்டுதான் எதையும் ஆரம்பித்து நலம் பெறுவோம். பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார்.
விக்னேச்வருடைய அனுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கி பூரண அனுக்கிரகம் செய்கிற அழகான பிள்ளை தெய்வம் பிள்ளையார்.
அவரை பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக! பெரிய அனுக்கிரகத்தை அனாயசமாக செய்கிற சுவாமி விக்னேஸ்வரர்.
பார்வதி பரமேச்வரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். பிள்ளை என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாக பிள்ளையார் என்று சொல்லுவது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு.
பிள்ளை தெய்வம் பிள்ளையாரை பிரார்த்திப்போமாக!!!
Categories: Upanyasam
WONDERFUL INFORMATION FROM MAHAPERIYAVA. MAY THE LORD BLESS ALL ONLY TOWARDS GOOD KARMA AND REMOVE THE EXISTING BAD KARMA
Wonderful. Pillayar is knowledge personified. You can make his idol with anything. He is a god
of simplicity and excellence. Nice to read this message from Periyava.
we are happy to note the preachings of periyava you can also add one photo
fantastic if we think of periyava all our sins are washed and we feel to do only good .