உபந்நியாசம் பண்ணுகிறோம். இன்னும் பல தினுசுகளில் தத்துவங்களை, தர்மங்களைப் பிரசாரம் பண்ணுகிறோம். ஆனால் இவற்றாலேல்லாம் தற்காலிகமான ஓர் உற்சாகம் தான் ஏற்படுமே ஒழிய, ஸ்திரமான மாறுபாடு நடக்காது என்பதுதான் என் அபிப்பிராயம். உபந்நியாசத்தினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல் சில ஜனங்களின் மனசில் ஏற்பட்டிருந்தால், அதுகூடப் போகப் போகத் தேய்ந்துதான் போகலாமேயொழிய வளருவதற்கில்லை.
வெறும் உபந்நியாசம் என்று வைத்து கொண்டால், உபந்நியாசம் முடிந்தவுடன், சாஸ்திர வழியில் அது உண்டாக்கின ஊக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்துவிடும். ஆகையினாலே, உபந்நியாசம் பண்ணி உலகத்தை மாற்றி விடலாம் என்று நான் எதிர்பார்த்திருந்தால் அது தப்பு. இதுவரைக்கும் இந்த உபந்யாசங்களால் எதாவது துளி உங்களுக்கு என்னாலானது கூட, போகப் போகப் பிசுபிசுவென்று போய் விடுமோ என்கிற ஸ்திதி.
நல்லதற்கு இல்லாமல் இப்போது லோகத்தில் பல பழக்கங்கள் வந்துவிட்டன. தர்மத்துக்கு மாறுதலாக கெடுதலாக, அநேக சமாச்சாரங்கள் நமது தேசத்து ஜனங்களிடம் வந்து சேர்ந்து விட்டன. இந்த பழக்கங்களை மாற்றினால்தான் அவர்களுக்கே நல்லது. இதெல்லாம் வாஸ்தவம். ஆனால் எப்படி மாற்றுவது ? இந்த காரியம் ஒருநாளும் உபந்நியாசத்தினால் ஆகாது. பின், எதனால் ஆகும் ? ஆத்மா சக்தியினால்தான் ஆகும்.
சரி, அது என்ன சக்தி ? அது எப்படி வேலை செய்யும் ? ஏதாவது மந்திரம் போட்டு மனசை மாற்றுகிற காரியமா ? வசியம் பண்ணுவதா ? இதெல்லாமில்லை. வேறு என்ன என்றால், இதுவரையில் லோகத்தில் வந்த பெரியவர்களைப் பார்க்கலாம் – மத ஸ்தாபகர்களைத்தான் சொல்லுகிறேன் – உலகத்தில் ஒரு பகுதியில் அநேக மநுஷ்யர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி வேறு தினுசாகக் கொண்டு வந்த அந்தப் பெரியவர்கள் இதை எப்படிச் செய்தார்கள் ?
தங்களுடைய பழக்கங்களெல்லாம் நல்லபடி ஆக வேண்டும். அவர்கள் எல்லாம் நல்ல க்ஷேமத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குச் சதா இருந்தது. பூரணமாக இருந்தது. அந்த எண்ணத்துக்கே சக்தி உண்டுதான். ஆனாலும் அது போதாது. அவர்கள் எந்த நல்ல பழக்கங்கள் ஜனங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த பழக்கங்களைத் தாங்களே முழுக்க அனுஷ்டித்துக் காட்டினார்கள். இந்த அனுஷ்டான சக்தி – சொன்னதைத் தானே செய்கிற சக்திதான் ஜனங்களை மாற்றியதே தவிர, வெறும் வார்த்தையைச் சொல்லி உபந்நியாசம் பண்ணுவது அல்ல.
உபந்நியாசம் பண்ண வேண்டாம் ! தான் பெரிசாக நினைக்கிற தர்மங்களை ஒருத்தன் தானே காரியத்தில் பண்ணிக் காட்டி கொண்டு, ஒரு தர்மோபதேசமும் பண்ணாவிட்டால் கூடப் போதும். அவன் வாழ்ந்து காட்டுகிற அனுஷ்டான சக்தி, அதுவாகவே கொஞ்சம் பேரையாவது அந்த வழிக்கு மாற்றிக் கொண்டு வந்துவிடும். எங்கேயோ ஒரு காட்டில் ஒரு மகான் உட்கார்ந்திருந்தால் கூட, அவருக்கு ஓர் தத்துவத்தில் ஸ்வயமாக அநுபவம் வந்துவிட்டிருந்தால், அது தானாக வெளி உலகத்திலும் வேலை செய்து பல பேரை அந்தக் கொள்கையில், அநுபவத்தில் கொண்டு வந்து சேர்த்து விடும்.
இப்போது சமீப காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார். நம் நாளிலேயே ரமணர் இருந்தார், அரவிந்தகோஷ் இருந்தார். இவர்கள் எல்லாம் என் மாதிரி ஊர் ஊராக யாத்திரை பண்ணி உபந்நியாசம் செய்யவில்லை. அவர்கள் ஒரே இடத்தில இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் இருந்த இடத்தில ஜனங்கள் தாமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களால் நிறைய மனமாற்றமும் நடப்பதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
Categories: Upanyasam
Paramacharya was always great. Who are we to comment on his advise. I got more clarifications on my philosophical doubts through his references found in many books. My whole hearted Pranams to him and bow my head to his lotus feet.
HH Mahaperiyava conveyed so much through His silence, influenced a whole diffident generation to soar up, showed how compassionate a person can be, performed miracles quietly and unobtrusively, lived with a mission and succeeded – all because He was God Parameswara and Goddess Ambal incarnate.
Kaliyuga Avadharam Namba Periva. HE lived as per Veda / Dharma Sastram and we all need HIS blessings always. We are all blessed soul, that we lived in HIS era. PERIVA SARANAM.
” IRUNDHADHAI IRUNDHAPADI IRUNDHU KAATTIYA ” ONE & ONLY GOD, MAHAPERIYAVA.
RAM RAM.
It is an Enriching & ENLIGHTENING Experience to see & read such Divine Perspectives of MahaSwami. Thank you for spotting & sharing this with us. May his Grace, continue to Guide & Protect us and our children. May we try earnestly to live upto the purity, that he practised for us. Namaskaram. Anbudan, Simizhee Seenuvaasan.
there is absolutely no scope for any comment .. I am nearing 60 and emulated only a fraction of qualities my uncle possesed .. (I lost my parents at a very young age and brought by my chithappa who literally sacrificed his life for our sake) .. our elders led by example, taught us good manners, respect to elders, inculcated fear of god from young age .. these are keeping us in good stead till today and my children are being brought up in the same manner .. so all good things must start from our door-step ..